டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்பிற்கு ரஷ்யா, சீனா, இத்தாலி கொடுத்த பரிசுகள்.. இந்திய வருகையின்போது கொடுத்தது என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அது போல் இந்தியா வந்துள்ள டிரம்ப்பிற்கு யமுனை நதிக்கரையில் தாஜ்மஹாலில் மனைவி மெலானியாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது.

Recommended Video

    Trump's message in the visitor's book at Raj Ghat | நேற்று இல்லை.. இன்று காந்தியை குறிப்பிட்ட டிரம்ப்

    கடந்த 2018-ஆம் ஆண்டு டிரம்பிற்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் மற்ற நாட்டு அரசுகள் கொடுத்த கிப்ட் குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

    அதில் வியத்நாம் பிரதமர் நுகுயென் ஜுவான் ஃபூக், தங்கத்தினாலான ஃப்ரேம் போட்ட டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை பரிசாக அளித்தார். இது டிரம்பை மிகவும் இம்ப்ரஸ் செய்தது.

    ஒரு பக்கம் டிரம்ப்.. சில கிமீ தூரத்தில் கடும் கலவரம்.. அவசர மீட்டிங் போட்ட அமித் ஷா.. திக் நொடிகள்!ஒரு பக்கம் டிரம்ப்.. சில கிமீ தூரத்தில் கடும் கலவரம்.. அவசர மீட்டிங் போட்ட அமித் ஷா.. திக் நொடிகள்!

    வியத்நாம்

    வியத்நாம்

    அது போல் பிரான்ஸ் நாட்டு எம்மானுவல் மேக்ரான் லூயில் வூட்டன் கோல்ப் பை மற்றும் சில புகைப்படங்களை டிரம்பிற்கு பரிசாக கொடுத்தார். இதன் மதிப்பு 8,275 டாலர்கள் ஆகும். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் மேயர் ஹிக்கரி கோல்ப் புட்டரை டிரம்ப்பிற்கு அளித்தார். இதன் மதிப்பு 450 டாலர்கள் ஆகும். வியத்நாமில் 3100 டாலர்கள் மதிப்புள்ள சித்திரம் வழங்கப்பட்டது.

    ஒப்படைப்பு

    ஒப்படைப்பு

    இவ்வாறு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் அனைத்தையும் டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் அமெரிக்க சட்டத்திட்டத்தின் படி அவற்றை அந்நாட்டு காப்பகத்தில் ஒப்படைத்துவிடுவர். டிரம்ப்பின் மகள் இவான்ங்கா மற்றும் மருமகன் ஜெரேட் குஷ்னேர் ஜோர்டன் ராணியிடம் இருந்து 3,185 டாலர் மதிப்பிலான பிரேஸ்லெட்டை தாங்கள் வைத்துக் கொள்வதற்காக சொந்த காசு கொடுத்து வாங்கினர். இதை தவிர்த்து பரிசாக வந்த இரு கிப்ட்களை ஜெரேட் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார்.

    மாணிக்கக் கற்கள்

    மாணிக்கக் கற்கள்

    முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர் மால்கோம் டர்ன்புல் கருப்பு நிற லெதர் பூட்ஸை பரிசாக வழங்கினார். அது 545 டாலர்களாகும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வக வடிவிலான ஒரு பொருளை வழங்கினார். இத்தாலி பிரதமர் கிசிப்பே கோண்டே ஊதா நிற மாணிக்க கற்கள் பதித்த ஸ்டெர்லிங் சுற்றுப்பட்டையை பரிசாக அளித்தார்.

    தாஜ் மஹால் புகைப்படம்

    தாஜ் மஹால் புகைப்படம்

    அது போல் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் 1500 டாலர்கள் மதிப்பிலான ஃபிபா உலக கோப்பை கலெக்டர்ஸ் பாக்ஸை கொடுத்தார். சீன பிரதமர் ஜீ ஜின்பிங் 2100 டாலர்கள் மதிப்பிலான வேஸை கொடுத்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ மார்பிளால் ஆன பெலுகா திமிங்கலத்தின் சிலையை கொடுத்தார். இதன் மதிப்பு 470 டாலர்கள் ஆகும். முதல் முறையாக இந்தியா வந்துள்ள டிரம்ப்பிற்கு நாம் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா மனைவி மெலானியாவுடன் தாஜ் மஹாலில் எடுக்கப்பட்ட புகைப்படம். எத்தனை சூப்பரான கிப்ட்!

    English summary
    India gifts framed picture of Trump and his wife Melania at Tajmahal amid he received more gifts from foreign nations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X