டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா குளோபல் வீக் 2020: இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.. பிரதமர் மோடி உரை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசி வருகிறார். இந்தியர்களை போல உலகில் திறமையான மக்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Recommended Video

    Modi Speech in India Global Week 2020

    யுகேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மீடியா நிறுவனமான இந்தியா ஐஎன்சி (India Inc) இந்த ''இந்தியா குளோபல் வீக் 2020 (India Global Week 2020)" நடத்தப்பட உள்ளது. இந்த முறை ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ளது. வருடாந்திர நிகழ்வான இதில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு உள்ளார்.

    India Global Week 2020: PM Narendra Modi to speak today in the event

    இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பியூஸ் கோயல் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ரவி சங்கர், மஹேந்திர நாத் பாண்டே ஆகியோரும் இதில் பேச இருக்கிறார்கள்.

    இதில் மொத்தம் 5000 உலக வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள். 30 நாடுகள் கலந்து கொள்கிறது. அதேபோல் 75+ நிகழ்வுகள் இதில் நடக்க உள்ளது. 250+ பேர் இதில் பேச உள்ளனர். இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியில் பேசுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

    பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் குரலை உலகம் கேட்க இது சரியான தருணம், என்று கூறியுள்ளார். இதில் பிரதமர் மோடி முதலீடுகள் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், இந்தியாவின் வருங்கால பொருளாதார திட்டங்கள் குறித்தும் பேசினார் . உலக அளவில் பிரதமர் மோடியின் பேச்சு கேட்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்! மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்!

    பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனா பரவல் குறித்து இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.அதே சமயம் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இயற்கையை அதிகம் மதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    இயற்கையை தாய் போல மதிக்கும் நாடு இந்தியா. கடந்த 6 வருடங்களில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்ந்து இருக்கிறது.

    மத்திய அரசின் நிதி உதவி மக்களுக்கு நேரடியாக சென்று உள்ளது. ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்துள்ளது.உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. இந்தியாவில் முதலீடுகள் செய்ய அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். உலகிலேயே இந்தியாதான் முதலீடு செய்ய எளிமையான நாடாக இருக்கிறது.

    இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான தாயகம்.உலகில் இந்தியாவை போல வேறு நாடு கிடையாது , என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    India Global Week 2020: Prime Minister Narendra Modi to speak today in the event.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X