டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்.. ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பிய உலக நாடுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளிலிருந்து 11,321 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 5.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

India got 5.5 lakh Remdesivir vials, 15,801 oxygen cylinders as foreign aid, says Centre

கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் உலகின் பல்வேறு நாடுகளும் மருத்துவ உதவி பொருட்களை அனுப்பி வருகின்றன. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிற உலக நாடுகளின் உதவிகளை இந்தியா ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து 11,321 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டரகள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்டுகள் , 7,470 வென்டிலேட்டர்கள், 5.5 ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளன. இந்த மருத்து பொருட்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    India-வில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு.. ஆனால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    மருத்துவ பொருட்களை மாநிலங்களுக்கு விநியோகம் செய்யக் கடந்த ஏப்ரல் 26இல் சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    international countries help to India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X