டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா தொற்று...உயிரிழப்பில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதற்கு காரணம் பரிசோதனையை அதிகரித்து இருப்பதுதான் என்று தெரிய வந்துள்ளது. உயிரிழப்பில் மெக்சிகோவை இந்தியா முந்திச் சென்றுள்ளது.

நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 75,000த்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இன்னும் சில நாட்களில் நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை பத்து லட்சத்தை கடக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் - வசதிகளை ஆய்வு செய்த முதல்வர் கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் - வசதிகளை ஆய்வு செய்த முதல்வர்

மாநிலங்கள்

மாநிலங்கள்

தேசிய அளவில் தொற்று அதிகரிப்பு உண்மையாக இருந்தாலும், நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் குறைந்து வருகிறது. துவக்கத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த மாநிலங்களில் டெல்லியைத் தவிர மற்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய அளவைவிட தொற்று அதிகமாக இருக்கிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

ஆந்திராவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு சதவீதம் அளவிற்கு தொற்று அதிகரித்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் இந்த மாநிலத்தில் 9.5 சதவீதம் அளவிற்கு தொற்று காணப்பட்டது. இது தற்போது 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொற்று குறைவான அளவில் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 16,000 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 12,000 பேர் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆந்திராவில் தினமும் 10,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 10 சதவீதம் அளவிற்கு இங்கு தொற்று அதிகரித்து வந்துள்ளது. தற்போது இருக்கும் அளவைவுடன் ஒப்பிடுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று 7000-8000 என்ற அளவில் இருந்துள்ளது.

கர்நாடகாவில் அதிகரிப்பு

கர்நாடகாவில் அதிகரிப்பு

இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5,000 - 7,000 என்று இருந்த தொற்று தற்போது 8,000 - 9,000 என்று அதிகரித்துள்ளது. முதன் முறையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 6,000 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பரிசோதனை அதிகரித்து இருப்பதால், தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 7.8 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உயிரிழப்பு

இந்தியாவில் உயிரிழப்பு

இந்தியாவில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் 78,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36.21 லட்சம் பேர் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27.74 லட்சம் பேர் அல்லது 76 சதவீதம் பேர் மீண்டு வந்துள்ளனர்.

Recommended Video

    Corona Vaccine : போட்டிபோடும் உலக நாடுகள்... எப்போதும் வரும் ?
    தமிழ்நாட்டில் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் உயிரிழப்பு

    மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவுக்கு 24,740 பேரும், ஆந்திராவில் 3,884 பேரும், தமிழ்நாட்டில் 7,231 பேரும், கர்நாடகாவில் 5,608 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 3,423 பேரும், டெல்லியில் 4,426 பேரும், மேற்குவங்கத்தில் 3,176 பேரும், பீகாரில் 688 பேரும், தெலங்கானாவில் 827 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    India has beaten Mexico in Coronavirus death moved to third place
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X