டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா.. கிடுகிடு உயர்வால் வேதனையில் மக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலையடையச் செய்துள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு ரஷ்யா அனுமதி கொடுத்த தடுப்பு மருந்து

    நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையில் சீனாவையே தாண்டியது இந்தியா.

    India has crossed 2 lakh in coronavirus

    ஆரம்பத்தில் ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கமாக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,07,615 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5,815 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை அதிகமாக நோய் உறுதியானது மக்களை கவலையடையச் செய்துள்ளது. இதுவரை கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 1,00,405 பேர் ஆகும். இது பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.

    1,01,669 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 41 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 72,300 பேரும், தமிழகத்தில் 24,586 பேரும், டெல்லியில் 20,834 பேரும், குஜராத்தில் 17,615 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட் சென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட்

    தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக கொரோனாவால் தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 187 ஆகும்.

    English summary
    India has crossed 2 lakhs in Coronavirus pandemic. It has got 7 th place in global level.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X