டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, இந்தியா விதிக்கும், புதிய வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது.

India has long had a field day putting Tariffs on American products Says Donald Trump

அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமையை இந்தியா இழந்துவிட்டதால், முன்பு அமெரிக்காவில் வரி விலக்கு பெற்றிருந்த 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதி பொருட்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றுக்கான வரிகளை அமெரிக்கா உயர்த்தியதை அடுத்து, சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியா உயர்த்தியது.

இந்தநிலையில், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகள் மீது தொடர்ந்து, வரி விதிக்கும் முறையை இந்தியா நீண்ட காலமாக வைத்துள்ளது. இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை?... நீதிபதிகள் சரமாரி கேள்வி ஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை?... நீதிபதிகள் சரமாரி கேள்வி

அதே சமயம், ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் மற்றும் ரஷ்யாவின் S-400 ஏவுகணைகள் வாங்கும் முடிவை கைவிடவில்லை என்றால், இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Donald Trump Slams on Twitter: India has long had a field day putting Tariffs on American products. No longer acceptable!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X