டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா.. மோடி பரபர அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மிஷன் சக்தி சோதனை வெற்றி.. மோடி அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: விண்வெளியில் நடைபெற்ற மிஷன் சக்தி, சோதனை அபார வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    இன்று காலை 11.45 மணி முதல் 12 மணி வரை உரையாற்றப்போவதாக மோடி அறிவித்ததும், நாடு முழுக்க பெரும் பரபரப்பு தொற்றியது. மாதந்தோறும் பேசுவதை போல ரேடியோ உரையாடல் இன்றி டிவி மூலமாகவும், இன்று உரையாற்றுவதாக அவர் அறிவித்தார்.

    Prime Minister Narendra Modi to address the nation

    மொத்தம் 4 படிகள்.. ஆன்டி-சாட் துல்லியமாக தாக்கியது இப்படித்தான்.. அசரவைக்கும் வீடியோ வெளியானது!மொத்தம் 4 படிகள்.. ஆன்டி-சாட் துல்லியமாக தாக்கியது இப்படித்தான்.. அசரவைக்கும் வீடியோ வெளியானது!

    கடந்த முறை 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் அறிவித்தார் மோடி. இதன்பிறகு, இன்று டிவியில் மோடி உரையாற்றப்போவதாக அறிவித்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

    இருப்பினும், சற்று தாமதமாகவே தனது உரையை ஆரம்பித்தார் மோடி. பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்று மார்ச் 27. சில நிமிடங்களுக்கு முன்பு, இந்தியா ஒரு வரலாற்று சாதனையை படைத்தது. பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா. நமது சொந்த குறைந்த புவி சுற்றுப் பாதை (low earth) செயற்கைக்கோளையே ஏ-சாட் ஏவுகணை மூலமாக, நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம்.

    இன்றைய தினம் தன்னை ஒரு விண்வெளி சக்தி நாடாக இந்தியா பதிவு செய்துள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள்தான், இந்த சாதனையை செய்துள்ளன. இந்த சாதனை படைத்த 4 வது நாடு இந்தியாவாகும்.

    A-SAT ஏவுகணை இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு, புதிய பலத்தை கொடுக்கும். இந்தியா தனது பலத்தை யாருக்கு எதிராகவும் பயன்படுத்தாது. ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்துள்ள, பாதுகாப்பு முயற்சி இதுவாகும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

    நாம் விண்வெளியில் நமது விண்கலங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிதானே இது தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது கிடையாது.

    நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, மிஷன் சக்தி மைல் கல்லாக இருக்கும். இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த திட்டத்திற்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிவித்தார்.

    English summary
    Prime Minister Narendra Modi to address the nation between 11:45 am - 12.00 noon, today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X