டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்?

இந்தியாவின் அணு ஆயுத கொள்கைகள் மாற்றப்பட்டால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பெரிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் அணு ஆயுத கொள்கைகள் மாற்றப்பட்டால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவின் அணு சக்தி சட்டப்பிரிவு 1954ல் உள்ள பிரிவு 123ன் படி இந்தியா அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை செய்து இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள் சர்ச்சைகளுக்கு பிறகு 2005ல் இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்தது.

அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அப்போதேய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அதிபர் ஜார்ஜ் புஷ் இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

என்ன அழுத்தம்

என்ன அழுத்தம்

இந்தியாவின் பொக்ரான் அணு ஆயுத சோதனைக்கு பின் அமெரிக்கா தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தது. பல வருடங்களுக்கு பிறகு 2005ல்தான் இதில் கையெழுத்து இடப்பட்டது. அதில் இருந்து இந்தியா அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய நட்பு இப்போதும் உள்ளது.

எப்படி சக்தி

எப்படி சக்தி

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா தனது அணு சக்தியை சரியான ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தலாம். இதற்காக வெளிநாடுகளில் இருந்து அணு சக்தி தொடர்பான இயந்திரங்கள், அறிவுரைகள். தொழில்நுட்பங்களை பெறலாம். ஆனால் இந்தியா புதிய அணு ஆயுத சோதனையை நடத்த முடியாது. அதேபோல் மற்ற நாடுகளின் மீது அணு ஆயுத தாக்குதல் (அவர்கள் தாக்காத வரை) நடத்த கூடாது.

தாக்குதல்

தாக்குதல்

ஆம் உதாரணாக பாகிஸ்தான் மீது நாமாக சென்று அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியாது. அவர்கள் நம் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் நாம் திருப்பி தாக்கலாம். நாம் முதல் நபராக இப்படி தாக்குதல் நடத்த கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

என்ன ம் உறுப்பு

என்ன ம் உறுப்பு

ஆனால் தற்போது இந்தியா அதை மாற்ற முடிவெடுத்துள்ளது.இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்றுள்ளார்.

எப்படி எதிர்

எப்படி எதிர்

இது முழுக்க முழுக்க அமெரிக்காவுடன் போடப்பட்ட 123 அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானது ஆகும். இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்றினால் அது அமெரிக்க ஒப்பந்தத்தை மீறுவதாகிவிடும். இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

வரி விதிப்பு

வரி விதிப்பு

ஏற்கனேவே மோசமான வரி விதிப்பு முறை காரணமாக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தியாவிற்கு எதிராக அவர் தொடர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு புதிய பிரச்சனை வேறு உருவாகி உள்ளது.

English summary
India has to break the USA 123 Nuclear Agreement to change its nuke policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X