டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்நாட்டு தயாரிப்பு...ஹைபர்சோனிக் ஏவுகணை...சோதனை வெற்றி...அமெரிக்காவுடன் இணைந்த இந்தியா!!

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யா, சீனா, அமெரிக்காவை அடுத்து சத்தத்தை விட விரைந்து செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை, ஒடிசாவில் இருக்கும் பாலசோரில், டாக்டர் அப்துல் கலாம் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. சத்தத்தைவிட ஆறு மடங்கு விரைந்து சென்று தாக்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை.

Recommended Video

    ஒலியை விட 6 மடங்கு வேகம் கொண்ட Hypersonic Vehicle

    இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை அடுத்தகட்டமாக நிலப்பரப்பு இலக்குகளை வைத்து தாக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    India has today successfully tested the Hypersonic Technology Demonstrator with scramjet engine

    இந்த ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. அக்னி ஏவுகணை போஸ்டர் கொண்டு இந்த ஏவுகணை இன்று காலை 11.03 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை ஐந்தே நிமிடங்களில் நடந்து முடிந்தது.

    ஒலியை விட 6 மடங்கு ஸ்பீட்.. இனி ஹைப்பர்சோனிக் வேகத்தில் தாக்கலாம்.. இந்தியா உருவாக்கிய HTDV -பின்னணிஒலியை விட 6 மடங்கு ஸ்பீட்.. இனி ஹைப்பர்சோனிக் வேகத்தில் தாக்கலாம்.. இந்தியா உருவாக்கிய HTDV -பின்னணி

    இதையடுத்து, ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏவுகணையை தயாரிக்கும். இன்று பரிசோதனைதான் முடிந்துள்ளது. இந்த வகையிலான ஹைபர்சொனிக் ஏவுகணை ஒரு விநாடியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று தாக்கும் திறன் படைத்தாக இருக்கும்.

    India has today successfully tested the Hypersonic Technology Demonstrator with scramjet engine

    இன்றைய சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி முன்னின்று நடத்தினார். காற்று அழுத்தம், காற்று உள்ளிழுப்பு, குறைந்த காற்று என்று அனைத்து மட்டங்களிலும் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்னி பூஸ்டர் தாங்கிச் சென்று 38 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற பின்னர் ஏவுகணையை பிரித்தது. இதில் இருந்து அப்போது ஏற்பட்ட தீப்பிழம்பு சுமார் 20 வினாடிகள் நீடித்தது.

    India has today successfully tested the Hypersonic Technology Demonstrator with scramjet engine

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனைக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். ஆத்மநிர்பர் பாரத் என்ற திட்டத்தை நினைவாக்கும் விதமாக இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகளிடம் பேசினேன். அவர்களது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவர்களால் இன்று இந்தியா கவுரவமடைந்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    India has today successfully tested the Hypersonic Technology Demonstrator with scramjet engine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X