டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 52,123 பேருக்கு கொரோனா பாதிப்பு- 775 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் மொத்தம் 775 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

India: Highest spike of over 52,000 Coronavirus Positives in a day

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 52,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 775 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு! ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,20,582. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,28,242.

English summary
India has registered highest ever spike of 52,123 new cases of coronavirus in a day. The total tally of Coronvirus infections now at 15,83,792.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X