டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவமானப்படுத்திவிட்டீர்கள்.. இந்தியாவை கடுமையாக சீண்டிய நேபாளம்.. சீனா தரும் ஆதரவு.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே காரசாரமான வார்த்தை போர் தற்போது நடந்து வருகிறது. எல்லையில் இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Recommended Video

    India - china issue | இந்திய எல்லையில் போர் ஜெட்களை இறக்கிய சீனா| Oneindia Tamil

    நேபாள் எல்லை அருகே லிபு லேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்தற்கு நேபாளம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் சண்டை வந்துள்ளது. இந்தியா தனது எல்லையில் போடும் சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைதான் லிபு லேக் பகுதி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்கள் தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இங்குதான் கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.

    உங்களால்தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது.. இந்தியா மீது பழிபோடும் நேபாளம்.. பின்னணியில் சீனா!உங்களால்தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது.. இந்தியா மீது பழிபோடும் நேபாளம்.. பின்னணியில் சீனா!

    சண்டைக்கு காரணம்

    சண்டைக்கு காரணம்

    இந்த சாலைதான் சண்டைக்கு காரணம். கைலாஷ் மானசரோவர் செல்லும் மக்களுக்காக இந்த சாலை அமைக்கப்பட்டது.லிபு லேக் பகுதியை நேபாள் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. சீனாவின் ஆதரவு இருப்பதால் நேபாளம் தற்போது கடுமையாக குரலை உயர்த்த தொடங்கி உள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த குட்டி தேசமான நேபாளம் தற்போது வாலாட்ட துவங்கி உள்ளது.

    சீனா ஆதரவு

    சீனா ஆதரவு

    சீனா கொடுக்கும் ஆதரவுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக சீனா நேபாளத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. சீனாவை பகைத்துக் கொண்டு நேபாளமும் இருக்க முடியாது. இதனால் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவை நேபாளம் மிக மோசமாக சீண்டி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு தற்போது பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது .

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே காரசாரமான வார்த்தை போர் தற்போது நடந்து வருகிறது. எல்லையில் இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் எம்எம் நாரவனே அளித்த பேட்டியில், நேபாள் நாட்டுடனான இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறியுள்ளோம். இத்தனை வருடம் அந்த பகுதியில் பிரச்சனை எதுவும் இல்லை.

    யார் இயக்குவது

    யார் இயக்குவது

    ஆனால் திடீர் என்று அங்கு பிரச்சனையை உண்டாக்க நேபாள் முயல்கிறது. இதற்கு காரணம் இருக்கலாம். நேபாளை பின்னிருந்து யாராவது இயக்கலாம். நேபாள் அரசுக்கு பின் மூன்றாவதாக ஒரு கை இருக்கிறது. இந்த பிரச்னையை விரைவில் சரி செய்வோம். விரைவில் இது தொடர்பாக முக்கியமான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு தற்போது நேபாளம் பதில் அளித்துள்ளது.

    நேபாளம் கொடுத்த பதிலடி

    நேபாளம் கொடுத்த பதிலடி

    இதற்கு நேபாளத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஈஷ்வர் பொக்ரியல் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையிலான உறவு மோசமடைந்து உள்ளது. நாங்கள் வேறு ஒரு நபருக்காக இப்படி செய்கிறோம் என்று இந்திய படைத்தளபதி கூறியதை ஏற்க முடியாது. அவர் எங்களை அவமானப்படுத்திவிட்டார். எங்களை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசி உள்ளார்.

    வரலாறு தெரியவில்லை

    வரலாறு தெரியவில்லை

    வரலாறு தெரியாமல் அவர் பேசி உள்ளார். இந்திய சுதந்திரத்தில் நேபாள கூர்க்கா படையின் பங்கு அவருக்கு தெரியவில்லை. இந்தியாவின் பாதுகாப்பில் நாங்கள் சிந்திய ரத்தம் அவருக்கு தெரியவில்லை. எங்கள் உணர்வுகளை அவர் புண்படுத்திவிட்டார். எங்களை அவர்களால் மிஞ்ச முடியவில்லை என்பதால் , இப்போது இந்தியா எங்களை அவமானப்படுத்துகிறது என்று ஈஷ்வர் பொக்ரியல் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    India hurts the sentiments of the Nepali Gurkha force says Nepal Defence Minster against India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X