டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு நபராவது இந்து என்று அழைத்துக்கொள்ளும்வரை இது இந்து நாடுதான், மாற்ற முடியாது: மோகன் பகவத் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு சித்தாந்தம் அல்லது சித்தாந்தவாதிக்குள் அடங்கக் கூடிய அமைப்பு கிடையாது, என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின், தேசிய அமைப்பு செயலாளர் சுனில் அம்பேகர் எழுதிய 'தி ஆர்எஸ்எஸ்: 21 ஆம் நூற்றாண்டுக்கான வழிகாட்டி' என்ற பெயரிலான புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மோகன் பகவத் பேசியதாவது:

India is a Hindu Rashtra: Mohan Bhagwat

ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தின் உள்ளேயோ அல்லது ஒரு சித்தாந்தவாதிக்குள்ளேயே, அடங்கிவிட கூடிய அமைப்பு கிடையாது.
அதேபோன்று எந்த ஒரு 'இசம்,' அல்லது கோட்பாடு ஆகியவற்றுக்குள் அடங்கக்கூடிய இயக்கமும் கிடையாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு புத்தகத்துக்கு உள்ளேயோ அல்லது கருத்து குவியலுக்கு உள்ளேயோ, கோல்வால்கர் (ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர்) உரைகளின் உள்ளேயோ அடைபடக்கூடிய அமைப்பும் கிடையாது.

இந்த நாடு இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்டிரம். இந்த உண்மையை நாங்கள் வாழ்க்கை முறையாக பெற்றிருக்கிறோம். இதை எங்களால் மாற்றிக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஒரே ஒரு நபராவது தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ளும் வரை இது இந்து ராஷ்டிரம் தான்.

சங் பரிவார் என்ற அமைப்புக்கு எந்த ஒரு வெளிநாட்டு மொழியாலும் உரிய விளக்கத்தை அளிக்க முடியாது. ஆனால் அம்பேகர் எழுதியுள்ள இந்த புத்தகம், சங்பரிவார் அமைப்பினருக்கும், பிற மக்களுக்கும் இந்த அமைப்பின் மதிப்பை வெளிச்சம்போட்டு காட்டும் என்று நம்புகிறேன். நமது அமைப்பு பற்றி பொதுவெளியில் இருக்கக்கூடிய சில தவறான புரிதல்களுக்கு இந்தப் புத்தகம் முடிவுரை எழுதும் என்றும் நம்புகிறேன்.

அதேநேரம் சங்பரிவார் என்பது ஒரு புத்தகத்துக்குள் அடக்கப்படக்கூடிய விஷயமில்லை. சங்பரிவார் என்பதும் சங் கொள்கைகள் என்பதும் நிறைவு செய்ய முடியாதது.

குருஜி கோல்வால்கர் கூட சங் என்பதன் அர்த்தத்தை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்றுதான் சொன்னாரே தவிர, முழுமையாக புரிந்து விட்டது என்று கூறவில்லை.

ஆர்எஸ்எஸ் கோட்பாட்டாளர் என்று யாருமே கிடையாது. சிலர் அவ்வாறு சொல்லிக்கொண்டு மீடியாக்களில் தோன்றலாம். ஆனால், அனுமார், மராட்டிய மன்னன் வீரசிவாஜி மற்றும் ஹெட்கேவார் ஆகியோர் தான் நமது முன்மாதிரிகள். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.

English summary
RSS chief Mohan Bhagwat said, “We have inherited this fact of life. We cannot change it. This is a Hindu Rashtra so long as there is even a single person calling himself Hindu.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X