டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே மிக அதிக உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட உள்ளது. மத்திய ரயில்வே துரையின் இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் நடந்து வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாடு முழுக்க சாலை போக்குவரத்து மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை, ஊர்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு ரயில்வே துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது உலகமே பார்த்து வியக்கும் ஒரு ரயில்வே திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

டெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு.. சிங்கப்பூரிலிருந்து பணம்.. போலீஸ் அறிக்கை டெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு.. சிங்கப்பூரிலிருந்து பணம்.. போலீஸ் அறிக்கை

அதிக உயரம்

அதிக உயரம்

அதன்படி உலகிலேயே மிக அதிக உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட உள்ளது. மத்திய ரயில்வே துரையின் இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. சென்னப் நதியின் மேல் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

எங்கு கட்டப்படும்

எங்கு கட்டப்படும்

இந்த பாலம் மொத்தம் 1.315 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இது மொத்தம் 359 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. உலகிலேயே ரயில் பயணத்திற்காக மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட உள்ள பாலம் இது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிறு சிறு ஊர்களையும் இதன் மூலம் இணைக்க முடியும் என்கிறார்கள். இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய திட்டமாக இது இருக்க போகிறது.

என்ன உயரம்

என்ன உயரம்

இந்த பாலத்தின் உண்மையான உயரம் ஐஃபில் டவரை விட அதிகமானது. ஐஃபில் டவரை விட 30 மீட்டர் உயரம் அதிகமாக இந்த பாலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிற மாநிலங்களை - காஷ்மீர் உடன் இது எளிதாக இணைக்கும் என்று கூறுகிறார்கள். காஷ்மீரில் கவுரி பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகே இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது .

எத்தனை பேர்

எத்தனை பேர்

மொத்தம் 1400 பேர் இந்த பாலம் கட்டும் பணியை செய்து வருகிறார்கள். இதில் 500 பேர் உள்ளூர் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்து மற்றும் ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் காட்டப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல், நிலநடுக்கம் ஆகியவற்றில் கூட இது வலுவாக இருக்கும். அந்த அளவிற்கு வலிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

இரண்டு பக்கம்

இரண்டு பக்கம்

இதில் 14 மீட்டர் பகுதி இரண்டு பக்க பாலமாக இருக்கும். இரண்டு ரயில்கள் செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 260 கிமீ வேகத்தில் இந்த பாலத்தில் ரயில் செல்ல முடியும். அதேபோல் 130 வருடம் பாலம் நிலைத்து நிற்கும். இந்த பாலம் விரைவில் திறக்கப்படும் என்பதால் மக்கள் இப்போதே இதில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

English summary
India is building world highest rail bridge in Kashmir district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X