டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

63 நாளில் முதல் முறையாக இந்தியாவில் குறைந்தது கொரோனா.. உயிரிழப்பும் குறைவு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. எனினும் உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பாதிப்பும் அதிகமாக உள்ளது. கடந்த 63 நாளில் முதல்முறையாக பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,29,217 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 10,85,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,85,87,898 பேர் மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 83,56,227 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

India is the only country in the world where the daily corona exposure is high

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,037,757 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,173,565 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,103,408 ஆக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,312,310 ஆக உயர்ந்துள்ளது. கொலம்பியாவில் 1,312,310

உலகில் நேற்று மிக அதிகபட்சமாக இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,759 ஆகும். இங்கிலாந்தில் நேற்று 13972 பேருக்கும், ரஷ்யாவில் 13592 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 710 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவில் 318 பேரும், இங்கிலாந்தில் 316 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். ஈரானில் 272 பேரும், பிரேசிலில் 203 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 220,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 150,709 பேரும், இந்தியாவில் 109,894 பேரும், மெக்ஸிகோவில் 83,781 பேரும், இங்கிலாந்தில் 42,875 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

English summary
India is the only country in the world where the daily corona exposure is high, corona death cases also high. us secand place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X