டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் உலகம்- தற்சார்பு பொருளாதார பாதையில் தேசம்.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிடம் இருந்து உலகம் நிறை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது; இந்தியாவின் வாயிலில் வாய்ப்புகள் ஏராளமாக காத்து கொண்டிருக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:

India is truly a land of opportunities, sasy PM Modi

கொரோனா எனும் பேரிடரை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். இது ஒரு தனிமனிதரின் சாதனை அல்ல.

உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உதவி செய்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்கின்றன. இந்தியாவின் திறமை மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருக்கின்றன.

இதனால் நமது வாயிலில் ஏராளமான வாய்ப்புகள் காத்து கொண்டிருக்கின்றன. போலியோ, அம்மை நோய்களை எதிர்கொண்டு அதற்கான தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு கொடுத்தோம். அதேபோல்தான் இப்போதும் கொரோனாவை எதிர்கொண்டிருக்கிறோம்.

ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது... பிரதமர் மோடி ட்வீட்ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது... பிரதமர் மோடி ட்வீட்

ஜனாதிபதி உரையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை புரிந்து கொள்ளாமலேயே எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த தருணத்திலாவது தேச நலனுக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

English summary
PM Modi said that the eyes of the world are on India. There are expectations from India in his address to the Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X