• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 2-வது அலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    India-வில் கொரோனாவுக்கு 1000 மருத்துவர்கள் மரணம்.. ஒரே நாளில் 50 பேர் பலி

    களமிறங்கும் பிடன்.. சர்வதேச நாடுகளுக்கு 8 கோடி வேக்சின் டோஸ்களை அனுப்ப முடிவு.. அமெரிக்கா திட்டம் களமிறங்கும் பிடன்.. சர்வதேச நாடுகளுக்கு 8 கோடி வேக்சின் டோஸ்களை அனுப்ப முடிவு.. அமெரிக்கா திட்டம்

    கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் இடைவிடாமல் பணியாற்றுகின்றனர். முதலாவது கொரோனா பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

    2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம்

    2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம்

    தற்போதைய கொரோனா 2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் சுமார் 1,000 மருத்துவர்கள் இதுவரை மரணித்துள்ளனர்.

    50 மருத்துவர்கள் மரணம்

    50 மருத்துவர்கள் மரணம்

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் இதுவரை பீகார் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 69 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

    பீகாரில் அதிகம்

    பீகாரில் அதிகம்

    கொரோனா 2-வது அலையில் உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும் டெல்லியில் 27 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அனாஸ் முஜாஹித் (வயது 26) என்ற ஜூனியர் மருத்துவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தார்.

    மருத்துவர் சங்கம் அதிர்ச்சி

    மருத்துவர் சங்கம் அதிர்ச்சி

    இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களில் 3% பேர் மட்டுமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள். மருத்துவர்களின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இது எதிர்பாராதது; துரதிருஷ்டவசமானது என்றனர்.

    English summary
    According to the Indian Medical Association, 50 doctors died in Sunday due to the Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X