டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காணாமல் போன 2.1 கோடி வேலைகள் . ஆனாலும் மிளிரும் இந்திய கிராமங்கள்.. ஆச்சர்ய பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: பல ஆண்டுகளாக நிலவி வந்த வேலையின்மை வளர்ச்சி கொரோனா தொற்றுக்கு பின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2.1 கோடி வேலைகள் குறைந்துள்ளது. ஆனாலும் இந்திய கிராமங்களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சி பூத்துக் குலுங்கியபோது, ​​இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக பெயர் பெற்றது.. அப்போது ஒவ்வொரு காலாண்டுகளிலும் நாடு அட்டகாசமான வளர்ச்சி எண்களைக் கொண்டிருந்தாலும், அப்போது நிலவிய வேலை ஒழுங்கின்மை மற்றும் வேலையின்மை வளர்ச்சியைப் பற்றியே பொருளாதார வல்லுநர்கள் பெரிதும் கவலைப்பட்டனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல வேலைகள் ஏன் வேகமாக வளரவில்லை என்று பலமுறை கேள்வி எழுப்பி வந்த பொருளாதார வல்லுநர்களிடையே இந்தியாவின் வேலையின்மை வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய கவலையாக வெளிப்பட்டது.

ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்

நடுத்தர மக்கள் பாதிப்பு

நடுத்தர மக்கள் பாதிப்பு

வேலையின்மை வளர்ச்சி விகிதம் இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஏனெனில் வேலைக்கு போய்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைத்தான் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் சார்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக லாக்வுடன் இந்தியாவின் முறையான வேலை சந்தையின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. மிகப்பெரிய அளவில் சரிந்துவிட்டது.

மாதசம்பள வேலைகள் காலி

மாதசம்பள வேலைகள் காலி

லாக்வுடன் அறிவிக்கப்பட்ட ஐந்து மாதங்களில், இந்தியாவின் முறைசார்ந்த துறைகள் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை கண்டது. இவைதான் நாட்டின் மிகப் பெரிய அளவில் மாதசம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் ஆகும். பொருளாதாரத்தைத் திறந்த பிறகும், மாத சம்பள வேலை வாய்ப்புகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாட்டின் வேலையின்மைக்கு காரணமாக பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் மேற்கோளிட்டுள்ளது.

நகர்புறங்களில் மோசம்

நகர்புறங்களில் மோசம்

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மட்டுமே பாதுகாப்பான வேலையாக கருதப்படும் மாத சம்பள வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்த காரணம்அல்ல
ஏனெனில் 2017-18 முதலே நாட்டில் வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருந்தது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாகவே வெளியிடப்பட்ட அரசின் வேலை கணக்கெடுப்பு, நாட்டின் வேலையின்மை 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்தை எட்டியது என்பதைக் காட்டியது. கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பள வேலைகள் குறைந்து வருகின்றன என்பதற்கான அறிகுறியை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

தொழில்முனைவோர்

தொழில்முனைவோர்

எனினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொழில்முனைவோர் அதிக அளவில் தொழில் தொடங்கியது. நாட்டில் சம்பள வேலைகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படாததற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று மும்பையைச் சேர்ந்த பொருளாதார சிந்தனைக் குழுவான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியா எகனாமி (சிஎம்இஇ) குறிப்பிட்டுள்ளத. "சம்பள வேலைகள் பொருளாதார வளர்ச்சியுடன் அல்லது தொழில் முனைவோர் அதிகரிப்புடன் இணைந்து வளர்வதாகத் தெரியவில்லை. ஆனால், தற்போதைய பொருளாதாரம் குறைந்துள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் "என்று சிஎம்இஇ நிறுவன எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் எழுதிய சமீபத்திய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள வேலைகள்

சம்பள வேலைகள்

அவர் தனது கட்டுரையில், "2019 க்கு முன்னர் இந்தியாவின் விரைவான வளர்ச்சி இருந்தபோதிலும், சம்பள வேலைகள் ஒரு நத்தை வேகத்தில் வளர்ந்ததாக தரவுகள் காட்டுகிறது. சம்பள வேலைகள் 2016-17ல் 21.2 சதவீதத்திலிருந்து 2017-18ல் வெறும் 21.6 சதவீதம் மட்டுமே வளர்ந்தன. இது 2018-19ல் 21.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் தொழில் முனைவோர் வளர்ச்சியின் பெரும்பகுதி சுயதொழில் புரிந்தவர்கள் மற்றும் மிகச் சிறிய அளவிலான வணிகங்களை மட்டுமே கொண்டிருந்தனர். இதனால் சம்பள வேலைகள் உயரவில்லை.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையை தொழில்முனைவோராக மாற்ற பிரதமர் மோடி பல சந்தர்ப்பங்களில் ஊக்குவித்தார். தொழில்முனைவு இந்தியாவில் உயர்வைக் கண்டாலும், பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க இது உதவுவதில்லை என்பது குறைந்து போன வேலைவாய்ப்பால் தெளிவாகிறது. இதுதவிர இந்தியாவில் பெரும்பாலான தொடக்க மற்றும் தொழில்முனைவோர் பல சவால்களால் தங்கள் தளத்தை விரிவுபடுத்த முடியாமல் போராடுகிறார்கள் என்று 2019 அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வில் தெரிவிக்கப்படடுள்ளது.

விவசாயிகளே அதிகம்

விவசாயிகளே அதிகம்

அனைத்து சம்பள வேலைகளும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் வெறும் 21-22 சதவிகிதம் மட்டுமே என்பது கவலைக்குரியது ஆகும். ஆனால் சம்பள வேலைகளை விட அதிகமான விவசாயிகள் உள்ளனர். அதைவிட, தினசரி கூலித் தொழிலாளர்கள் இன்னும் அதிகமாக உள்ளனர். விவசாயிகளும் தினசரி ஊதியம் பெறுபவர்களும் சேர்ந்து இந்திய உழைக்கும் மக்களில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளனர். அதாவது இந்தியாவின் பணியாளர்களில் பெரும்பகுதியினர் அமைப்பு சாரா துறையில் உள்ளார்கள்.
இந்தியாவில் சம்பள வேலைகள் திடீரென கரைந்து வருவதால், அமைப்பு சாரா பொருளாதாரம் சரிந்து ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளைமூடிவிட்டார்கள். நகர்ப்புற வேலைகளை இழந்தவர்களுக்கு விவசாயம் கடைசி இடமாக மாறியதால், லாக்வுடன் காலத்தில் கிராமப்புற பொருளாதாரம் மட்டுமே நிலையான வளர்ச்சியைக் கண்டது. பண்ணை வேலைவாய்ப்பு 14 மில்லியன் என்கிற அளவிசல் உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தான்.

எவ்வளவுவேலை நாட்டுக்கு தேவை

எவ்வளவுவேலை நாட்டுக்கு தேவை

எனினம் நாட்டின் வளர்ந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் முறையான வேலைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் பொருளாதாரத்திற்கு கிராமப்புற வளர்ச்சி போதாது. நகர்ப்புறங்களில் பணிபுரியும் சம்பளம் பெற்றவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியா 2.1 கோடி சம்பள வேலைகளை இழந்தது, இது 2019-20ல் 8.6 கோடியிலிருந்து கடந்த மாதம் 6.5 கோடியாக குறைந்தது.. 2.1 கோடி வேலைகள் குறைந்தது என்பது தொழில்துறையின் அனைத்து மட்டத்திலும் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதே சாட்சி என்று மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்

English summary
India lost 2.1 crore salaried jobs by the end of August, down from 8.6 crore in 2019-20 to 6.5 crore last month. Only the rural economy has seen a steady rise during the lockdown period as farming became the last resort for those who lost their urban jobs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X