டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புலி வாலைப் பிடித்த நாயராக இலங்கை... பாகிஸ்தானை விடுமா அல்லது நட்பு இறுகுமா... இந்தியா வெயிட்டிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானுடன் இலங்கையின் புதிய அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தியா - இலங்கை இடையிலான உறவு இருக்கும் என்று தெரிகிறது. காரணம், இவர்களின் நட்பு அப்படியாப்பட்டது.

இலங்கையின் அதிபர் தேர்தல் என்பது அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. குறிப்பாக இந்தியாவுக்கு. இலங்கையில் தற்போது அதிபர் பொறுப்புக்கு புதிதாக வந்துள்ள கோத்தபயா ராஜபக்சே சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் இந்தியா சுதாரிப்பாக செயல்பட வேண்டிய கட்டம் வந்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை நிறைய குழப்பமான முடிவுகளை எடுத்து விட்டதாக சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் தற்போது நாம் பாகிஸ்தானுடன் படு உஷ்ணம் காட்டி வரும் நிலையில், இலங்கை, பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தியா - இலங்கை உறவு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்!முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்!

ராஜபக்சே குடும்பம்

ராஜபக்சே குடும்பம்

கோத்தபயா ராஜபக்சே மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமுமே சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டுபவைதான். 70களில் இளம் ராணுவ அதிகாரியாக பாகிஸ்தானில் அதிகாரிகள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர் கோத்தபயா ராஜபக்சே. அப்போது இலங்கை - பாகிஸ்தான் இடையே மிக நெருங்கிய நட்பு நிலவியது.

ஈழப் போரின்போது

ஈழப் போரின்போது

அதேபோல ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தவர் கோத்தபயா ராஜபக்சே. இரு ராஜபக்சேக்களும் அப்போது செயல்பட்ட விதம் உலகத் தமிழர்களால் மறக்க முடியாதது. இலங்கை ராணுவத்துக்கு அப்போது பாகிஸ்தான் ராணுவமும் முழு ஆதரவு தெரிவித்திருந்தது.. பல உதவிகளையும் செய்தது.

ரணில் விக்கிரமசிங்கே

ரணில் விக்கிரமசிங்கே

மறுபக்கம், தற்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு சாதகமானவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவை ஆதரித்தவர். அதேபோல 2016ல் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் மாநாட்டையும் புறக்கணித்தவர். எனவே பாகிஸ்தானின் முதல் குறி ரணிலுக்கு எதிராகவே இருக்கக் கூடும். பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்து, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முயற்சிக்கலாம். ராஜபக்சே குடும்பத்துக்கும் ஆகாதவர்தான் ரணில். எனவே அவரது பதவிக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. விரைவில் அவர் அகற்றப்படலாம்.

சஜித பிரேமதாசா

சஜித பிரேமதாசா

கோத்தபயா ராஜபக்சே வென்றதை பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காரணம் உள்ளது. ஒரு வேளை சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அது பாகிஸ்தானுக்கு பேராபத்தாக போயிருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலப் பத்திரிகை எக்ஸ்பிரஸ் டிரிப்யூனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கோத்தபயாவின் வெற்றியை எங்களுக்கு சாதகமாகவே கருதுகிறோம். சஜித் வென்றிருந்தால் அது பாகிஸ்தானுக்கு பேராபத்தாக போயிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை - பாகிஸ்தான் நட்பு

இலங்கை - பாகிஸ்தான் நட்பு

பாகிஸ்தான் - இலங்கை நட்பு பலப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. அது 1971. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் போர் வெடித்த சமயம். இதன் விளைவாக வங்கதேசம் பிறந்தது. அப்போது இந்திய விமான நிலையங்களில் பாகிஸ்தான் விமானங்கள் இறங்கவும், எரிபொருள் நிரப்பவும், இந்திய வான்வெளியில் பறக்கவும் இந்தியா தடை விதித்திருந்தது. இதையடுத்து தனது நாட்டு விமான நிலையங்களில் இறங்கவும், எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் பாகிஸ்தானுக்கு இலங்கை அனுமதி அளித்தது.

தமிழர்களை தாக்கிய பாக்.

தமிழர்களை தாக்கிய பாக்.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் விமானங்கள், குறிப்பாக போர் விமானங்கள், இலங்கையின் கட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) மக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1971ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் மட்டும் மொத்தம் 174 முறை பாகிஸ்தான் போர் விமானங்கள் கட்டுநாயகே விமான நிலையத்தில் தரையிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது. (இப்படி பாகிஸ்தானுக்கு கை கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட இலங்கைக்குத்தான் பின்னாளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மிகப் பெரிய உதவி செய்து தமிழர்களை அழிக்க உதவியது என்பது துரதிர்ஷ்டவசமானது).

இந்தியாவின் உதவியும்

இந்தியாவின் உதவியும்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெல்ல இந்தியாவின் பேருதவியும் ஒரு காரணம். இலங்கை ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையிலான இறுதிப் போரின்போது இந்தியா செய்த உதவிகளை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதேசமயம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் அப்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது என்பதும் அதிர்ச்சிகரமான இன்னொரு உண்மை. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத உதவிகளை அளித்தது. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் போர் விமானிகள், விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகளை குறி பார்த்து தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தனர். மேலும் இலங்கை ராணுவத்துக்கு உதவியாக சில ராணுவ அதிகாரிகளையும் கொழும்புக்கு அனுப்பி வைத்து உதவியது பாகிஸ்தான்.

தீவிரவாதிகள் ஊடுறுவல்

தீவிரவாதிகள் ஊடுறுவல்

இப்படி இலங்கைக்கு ஒரு பக்கம் உதவிக் கொண்டே, மறுபக்கம் இலங்கையில் முஸ்லீம்கள் - சிங்களர்கள் இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி அங்கு தீவிரவாதிகளை ஊடுறுவ வைக்க ஐஎஸ்ஐ முயற்சித்த கதையும் நடந்தது. இலங்கையைப் பொறுத்தவரை பாகிஸ்தான் என்பது புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான். அது வரும் காலத்தில் எப்படி செயல்படப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் அதன் செயல்பாட்டைப் பொறுத்தே இந்தியாவின் அணுகுமுறை இருக்கும் என்பது மட்டும் உறுதி.

English summary
India may decide on ties with Srilanka after seeing its friendship with Pakistan under the Gotayaba leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X