டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கோரத் தாண்டவம்.. இந்தியர்கள் பீதியடைய வேண்டாம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நம்பிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனோ பாதிப்பு குறித்த நிலைமை, பிரதமர் அலுவலகத்தால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வழிகாட்டுதல்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் வெப்பத் திரையிடல் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே காய்ச்சலுடன் ஏர்போர்ட் வரும் பயணிகள் கண்டறியப்படுகிறார்கள்.

India monitoring the 3 Coronavirusus cases in India very minutely: Harsh Vardhan

வெளிவிவகார அமைச்சக உதவியுடன், சில மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக சீனாவுக்கு அனுப்புகிறோம்.

 சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 242 பேர் சாவு.. பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 242 பேர் சாவு.. பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்து பேசிய ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் உள்ள மூன்று நோயாளிகளையும் மிக நுணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அவர்களின் தொடர்பு வரலாற்றை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எல்லோரும் இந்த விஷயத்தில் பங்களிப்பு செய்தமைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்கிறோம். எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.

இன்றுவரை, 2,51,447 விமான நிலைய பயணிகள் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளனர். 12 பெரிய மற்றும் 65 சிறு துறைமுகங்களிலும் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

English summary
Union Minister Dr Harsh Vardhan on #Coronavirusus: We are monitoring the 3 cases in India very minutely. We have traced their contact history. We are really grateful that everybody is contributing. We are doing everything, so do not panic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X