டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய நோயாளிகள் எண்ணிக்கை.. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, உலக அளவில் 4வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அளவில் புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகும் நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்துக்கு ஏறிச்சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் லாக்டவுன் கெடுபிடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்கள் தான் லாக்டவுனை இன்னமும் கடுமையாக கடைபிடித்து வருகின்றன.

India moves up to top 4 Nations on new cases next to US, Russia and Brazil

இந்த நிலையில்தான், உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பட்டியலில், இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய பாதிப்புகள் அதிகம் இங்கு பதிவாவதுதான் இதற்கு காரணம்.

அமெரிக்காவில் புதிதாக 20,329 பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் அது முதல் இடத்தில் உள்ளது. புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவாகியுள்ள ரஷ்யாவில், 11 ஆயிரத்து 12 புதிய நோயாளிகள் உள்ளனர்.

பிரேசில் நாட்டில் 6368 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்தியாவில் 4,353 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

India moves up to top 4 Nations on new cases next to US, Russia and Brazil

பெரிதும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டில் கூட 3923 பேர்தான் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே ஐந்தாம் இடத்திற்கு போய் உள்ளது. ஆனால் மொத்த பாதிப்புகள் என்பது மேலே குறிப்பிட்ட நாடுகளை விட இந்தியாவில் குறைவாக இருப்பது மட்டுமே இப்போதைக்கு ஆறுதல்.

லாக்டவுன் நீட்டிப்பு? முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5-வது முறையாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை லாக்டவுன் நீட்டிப்பு? முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5-வது முறையாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை

67 ஆயிரத்து 161 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பரிசோதனையின் அளவு குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதால் இதை ஒரு சாதனையாக எடுக்க முடியாது. லாக்டவுன் கெடுபிடிகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

India moves up to top 4 Nations on new cases next to US, Russia and Brazil
English summary
India moves up to top 4 Nations on 'new cases' next to US, Russia and Brazil and more than UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X