டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்!

உங்களுக்கு பொருளாதாரத்தில் அடிப்படியாவது தெரியுமா மேடம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் ஜா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிரடி வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்- வீடியோ

    டெல்லி: உங்களுக்கு பொருளாதாரத்தில் அடிப்படியாவது தெரியுமா மேடம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் ஜா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்துள்ளார்.

    இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு 72 ஆக சரிந்துள்ளது. வரிசையாக நிறைய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டிற்கு அனுப்பியது.

    India needs a new Finance Minister desperately says Congress trolling Nirmala Sitharaman

    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்தார். உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து நலன் நிலையில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் நிர்மலா சீதாராமனின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். எப்போதும் பாஜகவின் பொருளாதார கொள்கைகளை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் புள்ளி விவரங்களுடன் விமர்சிப்பார்.

    2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி 2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி

    ஆனால் அவர் தற்போது சிபிஐ மூலம் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இதனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் நிர்மலா சீதாராமனின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் ஜா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், இந்தியாவிற்கு அவசரமாக ஒரு புதிய நிதி அமைச்சர் தேவைப்படுகிறார். இப்போது இருக்கும் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, அமெரிக்கா சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை விட அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

    ஆனால் மேடம், அமெரிக்கா என்பது 21 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அதேபோல் சீனா 14.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரம். உங்களுக்கு இதில் குறைந்தபட்சம் அடிப்படையாவது தெரியுமா ? மேடம்? நாம் 2.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில்தான் இருக்கிறோம் என்று சஞ்சய் ஜா நிர்மலாவை கிண்டல் தெரிவித்துள்ளார்.

    English summary
    India needs a new Finance Minister desperately says Congress trolling Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X