டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய பிசினஸ் ரூல்ஸ்.. சீனாவுக்கு இந்தியா வைத்த இன்னொரு செக்.. சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய பாதுகாப்பு அடிப்படையில் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகர்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசு இதற்காக புதிய வர்த்தக விதிகளை கொணடு வந்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

Recommended Video

    India Border-ல் சீண்டும் China மீது New Trade Rules-ஐ விதித்த India |Oneindia Tamil

    ஜூன் 15 அன்று லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பொருளாதார ரீதியாக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர். இருந்தபோதிலும், சீன ராணுவத்தினர் லடாக்கின் சில பகுதிகளிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.

     ரிஸ்க் எடுக்க தயாரான இந்தியா.. ரிஸ்க் எடுக்க தயாரான இந்தியா.. "ராஜாங்க உறவுகளை" கண்டு நடுங்கிய சீனா.. வெளிப்படையாக வைத்த கோரிக்கை!

    ஏலம் எடுக்க விரும்புவோர்

    ஏலம் எடுக்க விரும்புவோர்

    இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் "அவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரசபையில் (மத்திய அரசில்) பதிவு செய்தால் மட்டுமே" எந்தவொரு கொள்முதல் செய்வதற்கும் ஏலம் எடுக்கவும் தகுதியுடையவர்கள் ஆவர்.

    உள்நாட்டு வர்த்தகம்

    உள்நாட்டு வர்த்தகம்

    அவர்கள் பதிவு செய்வதற்கான தகுதிவாய்ந்த அதிகார சபையாக, கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் அமைத்துள்ள பதிவுக் குழுவாக இருக்கும். இதில் பதிவு செய்ய முறையே வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பு அனுமதி கட்டாயமாக இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மருந்துக்கு விலக்கு

    மருந்துக்கு விலக்கு

    எந்தவொரு கொள்முதல் - பொருட்கள் அல்லது சேவைகள் (ஆலோசனை சேவைகள் மற்றும் ஆலோசனை அல்லாத சேவைகள் உட்பட) அல்லது படைப்புகள் (ஆயத்த தயாரிப்பு திட்டங்கள் உட்பட) இந்த உத்தரவு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் உலகளாவிய தொற்றுநோயான கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவப் பொருட்களை வாங்குவது உட்பட. சில விதிவிலக்குகள் டிசம்பர் 31 வரை செய்யப்பட்டுள்ளன. அதாவது மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அபிவிருத்தி உதவி நாடுகள்

    அபிவிருத்தி உதவி நாடுகள்

    இதனிடையே இந்த புதிய வர்த்தக விதிகளில் இருந்து தனி உத்தரவின் மூலம், இந்திய அரசின் கடன் வரிகளை விரிவுபடுத்தும் அல்லது அபிவிருத்தி உதவிகளை வழங்கும் நாடுகளுக்கு முன் பதிவு செய்வதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கால்வான் மோதல்

    கால்வான் மோதல்

    லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 ம் தேதி ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக அகில இந்திய வர்த்தகர்களின் அமைப்பு சீனப் பொருட்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. இதற்கிடையில் மத்திய அரசு ஆன்லைன் விற்பனை நிறுவனங்களிடம் மேட் இன் இந்தியா அல்லது மேட் இன் சீனா, மேட் இன் அமெரிக்கா என எந்த நாட்டின் பொருள் என்பதை வெளிப்படையாக அதில் காட்டுவதை கட்டாயமாக்கியது. அதன்பின்னர் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், சீன ஆப்களான டிக்டாக் மற்றும் யுசி பிரவுசர் உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்தது. இதையடுத்து தற்போத வர்த்தக விதிகளை கொண்டு வந்துள்ளது. இவை எல்லாமே சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி நடவடிக்கையாகும்.

    சீனா படைகள் குவிப்பு

    சீனா படைகள் குவிப்பு

    இது ஒரு புறம் எனில் சீனர்கள் "கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் நடந்த பகுதிகளில் சீனா சொன்ன சொல்லை காப்பாற்றி ராணுவத்தினரை விலக்கி கொள்ளவில்லை. எல்லையில் ஏராளமான வீரர்களை நிறுத்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து பதற்றம் நீட்டிக்கிறது.

    English summary
    India has put restrictions on traders from nations sharing border on grounds of defence and national security. The move is expected to affect Chinese firms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X