டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: உலக நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா- மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் மட்டும் 60% பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா தாக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டெல்லியில் மட்டும் 60% பாதிப்பு உள்ளது. தற்போது உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1,15,50,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,36,445. அமெரிக்காவில் 29,82,928 பேரும் பிரேசிலில் 16,04,585 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம் தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம்

3-ம் இடத்தில் இந்தியா

3-ம் இடத்தில் இந்தியா

3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 6,97,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் 19,700 ஆக உள்ளது. ரஷ்யா 4-வது இடத்திலும் பெரு 5-வது இடத்திலும் உள்ளது.

3 மாநிலங்களில் 60% பாதிப்பு

3 மாநிலங்களில் 60% பாதிப்பு

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில்தான் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் இந்த 3 மாநிலங்களில் மட்டும் 60% பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,619 ஆக உயர்ந்திருக்கிறது.

3 மாநிலங்களின் பாதிப்பு

3 மாநிலங்களின் பாதிப்பு

மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் 1,11,151 பேரும் டெல்லியில் 99,444 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகபட்சம் 36,000த்தை தாண்டியதாக மட்டும் உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 4,000-த்தை தாண்டி மிக அதிகமாகி வருகிறது

சென்னையில்தான் அதிக பாதிப்பு

சென்னையில்தான் அதிக பாதிப்பு

தமிழகத்தில் சென்னை நகரம்தான் மிகவும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 68,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1051 ஆக உள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1510 என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra, Tamil Nadu and Delhi account for more than 60% of all cases recorded in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X