டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா என்ன சீன் போட்டாலும் சரி... லடாக் எல்லையில் பலத்தை காட்ட பக்கா ரெடியாக நமது ராணுவம்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் சீனாவின் அதிருப்திகள், ஊடுருவல்களை பற்றி எல்லாம் கவலைப்படமால் உரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது.

பூட்டானின் டோக்லாமில் இந்தியாவுடன் மல்லுக்கட்டியது சீனா. இருநாடுகளிடையேயான யுத்தங்களுக்குப் பின்னர் நிகழ்ந்த மிகப் பெரும் மோதலாக இது பார்க்கப்பட்டது.

தொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு! தொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு!

டோக்லாம் பிரச்சனை

டோக்லாம் பிரச்சனை

பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடிவில் டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்தது. டோக்லாமை ஆக்கிரமித்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என நினைத்தது சீனா. அது நடக்கவில்லை . தற்போது லடாக்கில் சீனா மீண்டும் வாலாட்ட தொடங்கியுள்ளது. எல்லையாக இருக்கும் பாங்காங் சோ பகுதியில் சீனா ஊடுருவலை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

லடாக்கில் எதிர்ப்பு

லடாக்கில் எதிர்ப்பு

இப்பகுதியில் இந்தியா சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கிறது சீனா. ஆனால் மத்திய அரசோ சீனாவின் எதிர்ப்பை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவில் இருக்கிறது. இதனால் லடாக் எல்லை பிராந்தியத்தில் கட்டுமானப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்கிறது ராணுவம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் இணைத்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கான வானிலை அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தான், இந்தியாவின் ஒட்டுமொத்த காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லையில் எதையும் எதிர்கொள்வோம்

எல்லையில் எதையும் எதிர்கொள்வோம்

இந்தியாவின் இந்த அதிரடியானது காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து எல்லையாக்கி வைத்திருக்கும் சீனாவுக்கும் நெருக்கடிதான். இப்போது லடாக் எல்லையில் குட்டையை குழப்புவது, சிக்கிமில் மோதுவது எல்லாமே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் காட்டமான நடவடிக்கைகளை தாங்க முடியாத சீனாவின் கோப வெளிப்பாடுதான். ஆனாலும் எதையும் எல்லையில் எதிர்கொள்வது என்கிற முடிவில் இருக்கிறது ராணுவம்.

English summary
India will not stopy its works in the China Border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X