டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் கொரோனாவால் 3வது மோசமாக பாதிக்கப்பட்ட நாடானது இந்தியா.. ரஷ்யாவை முந்தி ஷாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியல் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியாவிற்கு முன்பாக தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

India on today replaced Russia as the country third worst-hit by the novel coronavirus pandemic

இந்தியாவில் கொரோனா தொற்றால் 695,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 681251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21492 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 19692 பேர் கொரோனாவால் உயிரிழந்துளளனர். ஆனால் ரஷ்யாவில் இதுவரை 10161 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!

உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 2,957,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 132,405 பேர் இதுவரை இறந்துவிட்டனர். 1,563,235பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 1,578,376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 64365 பேர் இறந்துவிட்டனர்.

மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்

கொரோனாவால் ஒரே நாளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் நேற்று இந்தியா 610 பேருடன் 3வது இடத்தை பிடித்திருந்தது. 1111 பேருடன் பிரேசில் முதல் இடத்தையும், 654 பேருடன் மெக்ஸிகோ 2வது இடத்தையும், 254 பேருடன் அமெரிக்கா 4வது இடத்தையும் பிடித்திருந்தது.

English summary
India surpasses Russia as country third worst-hit by novel coronavirus. India now trails only the USA and Brazil, two countries most affected by the novel coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X