டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. மோடியை பத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    நரேந்திர மோடி பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள்

    டெல்லி: நரேந்திர மோடி போன்ற ஒருவரை பிரதமராக பெறும் இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்கிறார்.

    அவருக்கு பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 23 ஆம் தேதியே மோடிக்கு வாழ்த்து கூறினார்.

    மோடி நன்றி

    அப்போது முக்கிய வேலைகளை இணைந்து செய்திட எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார். இதனை ட்ரம்ப் டிவிட்டர் வாயிலாக கூறியிருந்தார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்திருந்தார்.

    போனில் பேசிய ட்ரம்ப்

    போனில் பேசிய ட்ரம்ப்

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

    அதிர்ஷ்டசாலிகள்

    நரேந்திர மோடி பெரிய மனிதர் இந்தியாவின் பெரிய தலைவர். மோடி போன்ற ஒரு மனிதரை பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    பில்கேட்ஸ் வாழ்த்து

    இதேபோல் பிரதமர் மோடிக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 தேர்தலில் குறிப்பிடதகுந்த வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பலர் உயிர்களை மேம்படுத்தும் என்று பில்கேட்ஸ் தனது ட்விட்டில் கூறியுள்ளார்.

    இன்னும் செய்வோம்

    இன்னும் செய்வோம்

    பில்கேட்ஸின் ட்விட்டுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் இந்தியாவிற்கான முன்னுரிமை அளிக்கும் பகுதிகளான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பற்றி நீங்கள் குறிப்பிடுவது மகிழ்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறைகளில் நாங்கள் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளோம், மேலும் தற்போது அவற்றை இன்னும் அதிகமாக செய்வோம் என தெரிவித்துள்ளார் மோடி.

    English summary
    US president Donald Trump says India people are lucky to have Narendra Modi. Modi is a greate man trump said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X