டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு… ஆனா, சந்தோசம் இல்லை… ஐ.நா தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டு, 140 வது இடத்தை பிடித்துள்ளது.

ஐ.நாவின் சார்பு நிறுவனமான ''Sustainable Development Solutions Network'' 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

India people’s are not happy says UN Report

தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஃபின்லாந்து, டென்மார்க், நார்வே முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 156 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 140 வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு, இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உலக மகிழ்ச்சி தினம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனாமனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனா

கடந்தாண்டு 133 வது இடத்தில் இருந்த இந்தியா, 7 இடங்கள் சரிந்து 140 வது இடத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தான் 67 வது இடத்திலும், சீனா 93 வது இடத்திலும் உள்ளன. மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் உள்ளது.

மேலும், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், அதிகம் வாக்களிக்க வருவார்கள் என்றும் ஐ. நா கூறியுள்ளது.

English summary
UN Report release: Indian people’s are not happy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X