ஆப்பிரிக்காவிற்கு "ஒளி" தரும் இந்தியா.. மாபெரும் சோலார் திட்டம்.. உலக நாடுகளை வியக்க வைக்கும் பிளான்
டெல்லி: ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் மாபெரும் சூரிய மின்சார திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து இந்தியா இந்த செயல் திட்டத்தை களமிறக்க உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்தியா தற்போது அதிக அளவில் சோலார் மின்சார திட்டங்கள் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கூட சில நாட்களுக்கு முன்பு ஆசியாவின் பெரிய சோலார் திட்டம் நிறைவேற்றப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவின் இந்த சோலார் திட்டத்தை ஐநா தொடங்கி உலக நாடுகள் எல்லாம் பாராட்டியது. உலகின் எதிர்காலம் சோலார் மின்சாரமாக இருக்க போகிறது, அதற்கும் இந்தியா முன்னோடியாக உள்ளது என்றும் ஐநா கூறியுள்ளது.
கைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் "ஹுவாவே" மோதல்!

ஆப்பிரிக்கா திட்டம்
இந்த நிலையில்தான் தற்போது ஆப்பிரிக்காவில் மாபெரும் சோலார் திட்டத்தை செயல்படுத்த இந்தியா முடிவு எடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசின் என்டிபிசி எனப்படும் தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சோலார் கூட்டமைப்பில் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது.

எங்கு எல்லாம்
முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா, மாளவியா ஆகிய நாடுகளில் இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது. முன்பு மாலி மற்றும் டோகோ ஆகிய நாடுகளில் இந்தியா இதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது . இதேபோல் ஆப்ரிக்காவில் இருக்கும் மற்ற நாடுகளான சூடான், மொசாம்பிக், எகிப்து , உகாண்டா, ருவாண்டா, நைஜர் ஆகிய நாடுகளில் இதே திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது .

மிக குறைந்த செலவு
மிக மிக குறைந்த செலவில் வெறும் 2.36 ரூபாய்க்கு இதன் மூலம் மின்சாரம் வழங்க முடியும் என்கிறார்கள். ஆப்ரிக்காவில் அமையப்போகும் மிகப்பெரிய சோலார் திட்டமாகும் இது. மாலி, டோகோ திட்டங்கள் மூலம் 718 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். அதேபோல் ஆப்ரிக்காவில் இந்த இடத்திற்கு அருகே இன்னொரு 370 மெகாவாட் மின்சார உற்பத்தி மையத்தை தயாரிக்க திட்டங்கள் அமைக்க உள்ளனர். இந்தியாவின் மதிப்பு இதனால் உலக அளவில் உயர்ந்துள்ளது.

சீனாவின் திட்டம்
சீனாவின் ஒன் பெல்ட் மற்றும் ஒன் ரோட் திட்டத்திற்கு எதிராக இந்தியா இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சீனாவின் இந்த திட்டத்தை இந்தியாவின் பிளான் முறியடிக்கும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் இந்த திட்டத்தை "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின்சார திட்டம் (One Sun One World One Grid)'' என்று கூறுகிறார்கள். இதன் மூலம் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமின்று மத்திய ஆசிய நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் இந்தியா மின்சார திட்டங்களை கொண்டு வர இருக்கிறது.

இந்தியாவின் பிளான் என்ன
இந்தியாவின் புதிய வெளியுறவுக்கொள்கை திட்டமாக இது பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் இந்த திட்டத்தை பார்த்து வியந்து போய் உள்ளது. கொரோனா வைரசுக்கு பின்பான உலகில் எந்த நாடு பெரிய அளவில் முன்னேறும் என்று கேள்வி உள்ளது. இந்த நிலையில் இந்தியா அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு உலக நாடுகளுக்கு உதவி தனது தலைமை உலகிற்கு உணர்த்த போகிறது என்று கூறுகிறார்கள். ஆப்பிரிக்காவை இந்தியா திடீரென குறி வைக்க காரணம் இதுதான் என்கிறார்கள்.