டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரும்பு விவசாயிகளுக்கு மானியம் தர எதிர்க்கும் பிரேசில்.. மோதலுக்கு தயாராகும் இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு மானியம் தர உலக வர்த்தக அமைப்பிடம் பிரேசில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா பிரேசிலுடன் மோதலுக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் 5.5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு மானியம் அளிப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் பிரேசில் அரசு புகார் அளித்திருக்கிறது.

India ready to fight Brazil’s attack on sugarcane subsidies at World Trade Organization

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி தங்கள் நாட்டையும் மிஞ்சிவிடும் அச்சத்தில் உள்ள பிரேசில், இந்தியாவின் செயலால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை குறைந்து, பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து உரிய விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் அதிகாரிகள் விதிமுறைகளை மீறவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்

மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உலக வர்த்தக அமைப்பில் இந்திய அரசின் கரும்பு விவசாயிகளுக்கான விலைக் கொள்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இந்திய விவசாயிகளுக்கான கரும்பு மானியங்களை என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்போம், ஏனெனில் இந்தத் துறைக்கு அரசாங்கத்தின் ஆதரவு தேவை. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மீது வழக்கு பதிவு கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மீது வழக்கு பதிவு

English summary
India has a “strong case” to fend off an attack on its price policy for some 55 million sugarcane farmers of the country at the World Trade Organisation by Brazil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X