• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியாவில் நடப்பு ஆண்டில் 20 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடுகள்... மோடி பெருமிதம்

|

டெல்லி: இந்தியா நடப்பு ஆண்டில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான அன்னிய முதலீடுகளைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா இடையேயான நல்லுறவுக்கான அமைப்பான USISPF-ன் 3-வது தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த மாநாடானது புதிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியா- அமெரிக்கா என்பதை மையமாக கொண்டது. இதில் இந்திய பசிபிக் பிராந்திய சிக்கல்கள், அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

India received $20 billion FDI this year, says PM Modi

கொரோனா பரவல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நமது சுகாதார அமைப்புகள், பொருளாதார அமைப்புகள் கடுமையான பாதிப்பை உருவாக்கி உள்ளது.

தற்போதைய சூழ்நிலையானது புதிய சிந்தனைகளுக்கான களமாக இருக்கிறது. ஒவ்வொருவரிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் அவசியமானதாகவும் இருக்கிறது. இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.

ஆனால் குறிப்பிட்ட அளவு வளம் கொண்டதுதான். ஆனாலும் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளன. இந்தியாவின் தொழில் சமூகம் குறிப்பாக சிறுதொழில் சமூகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

கையில் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் கொரோனா உயிர் காப்பு கவசங்களை இந்திய சிறுதொழில்துறை சமூகம் உருவாக்கத் தொடங்கியது. தற்போது கொரோனா உயிர் காப்பு வசங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

கொரோனோவின் பாதிப்பு இருந்தாலும் 130 கோடி இந்தியர்களின் லட்சியங்களுக்கும் வேட்கைகளுக்கும் அது குறுக்கே நிற்கவில்லை. இந்தியாவில் வர்த்தக சூழ்நிலையை சீரமைக்க பல்வேறு சீர்திருத்தங்களை அண்மையில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். உலகின் மிகப் பெரிய வீடுகள் கட்டும் திட்டத்தையும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியையும் இந்தியா முன்னெடுத்திருக்கிறது. ரயில், சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டிருக்கிறது,

கொரோனாவால் கடும் பாதிப்பு- வலிநிறைந்த 2020-ம் ஆண்டு: அமெரிக்கா-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

வங்கிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். உலக நாடுகளிடையேயான பரிமாற்றம் என்பது விலையின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதை கொரோனா நமக்கு பாடமாக கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி வகிக்கிறது. அது அமெரிக்காவானாலும் ஆப்பிரிக்காவானாலும் வளைகுடா நாடுகளானாலும் இந்தியாவை நம்புகின்றனர். நடப்பு ஆண்டில் இந்தியா 20 பில்லியன் டாலர் அன்னிய முதலீடுகளைப் பெற்றிருக்கிறது.

கூகுள், அமேசான் உள்ளிட்டவை இந்தியாவுக்கான நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. இந்தியாவின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வெளிப்படை தன்மையை ஊக்கப்படுவ்த்துவதாக உள்ளது. உலகிலேயே வரிகள் குறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. புதிய தொழில்ற்சாலைகளை மானியங்கள் மூலம் ஊக்கப்படுத்தி உருவாக்கி வருகிறோம். சர்வதேச அளவில் உலக நாடுகளின் அன்னிய முதலீடு 1 சதவீதம் வீழ்ச்சியடைந்த 2019-ல் இந்தியா 20% வளர்ச்சியைப் பெற்றது.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
PM Modi said that the India received $20 billion FDI this year in USISPF summit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X