டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

65 ஆண்டுகளில் 2வது முறையாக குறைந்த மழையளவு: நாடு முழுவதும் 100 மிமீ கூட பெய்யல.. வானிலை மையம் பகீர்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலாத்தில் 99 மி.மீ மட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் கோடைக்காலத்தில் 10 சென்டி மீட்டர் கூட மழை பெய்யவில்லை.

நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் குடி நீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு காரணம் பருவமழை முறையாக பெய்யாமல் பொய்த்துபோனதே என கூறப்படுகிறது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இதுவரை கேரள மாநிலத்தில் தொடங்கவில்லை.

தமிழகத்தில் வெற்றிடமா?.. நான் இருக்கிறேன்.. ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் திடீர் பதிலடி தமிழகத்தில் வெற்றிடமா?.. நான் இருக்கிறேன்.. ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் திடீர் பதிலடி

சின்னாபின்னமான கேரளா

சின்னாபின்னமான கேரளா

இன்னும் 2 நாட்களில் பருவமழை தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொட்டித்தீர்த்த தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலம் வரலாறு காணத வெள்ளப்பெருக்கையும் சேதத்தையும் சந்தித்தது.

பொய்த்து போன பருவமழை

பொய்த்து போன பருவமழை

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை பருவமழை தொடங்கவில்லை. அதேபோல் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து மக்கள் குடிநீருக்கே குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கைவிரித்த கோடை மழை

கைவிரித்த கோடை மழை

பருவமழை ஏமாற்றிய நிலையில் கோடை மழையாவது கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்தனர் மக்கள். வழக்கமாக கோடைக்காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது வெப்பசலனம் ஏற்பட்டு கோடை மழை கொட்டித் தீர்க்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழையும் கைவிரித்துவிட்டது. இதனால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

65 ஆண்டுகளில் வறட்சி

65 ஆண்டுகளில் வறட்சி

இந்நிலையில் கடந்த 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கோடைக்காலத்தில் மிக மோசமான மழையளவை பெற்றிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வறட்சி

மோசமான வறட்சி

இந்தியா முழுவதும் உள்ள 36 துணை வானிலை மையங்களில் 26 வானிலை மையங்கள் மிகவும் குறைந்த மழைளவை பதிவு செய்துள்ளன. 1954ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படி ஒரு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது

100 மிமீ கூட பெய்யல

100 மிமீ கூட பெய்யல

இந்திய வானிலை மைய அறிக்கையின்படி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் வெறும் 99 மில்லி மீட்டர் மழையளவு மட்டுமே நாடு முழுவதும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது சராசரியை விட 23 சதவீதம் குறைவாகும். இந்த மழை சமீப காலத்தில் மிக மோசமான மழையளவாகும்.

எங்கெல்லாம் குறைந்த மழையளவு?

எங்கெல்லாம் குறைந்த மழையளவு?

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி வடகிழக்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய கால மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவாக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 60 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு

கடும் தண்ணீர் தட்டுப்பாடு

மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் மற்ற பகுதிகளை காட்டிலும் குறைந்தளவாக 75% மழையளவு குறைந்துள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் 10 மிமீக்கு குறைவாகவே மழை பதிவை பெற்றுள்ளது. அதாவது ஒரு சென்டி மீட்டர் கூட மழை பெய்யவில்லை. இதனால் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அணைகளும் வறண்டது

அணைகளும் வறண்டது

மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் இந்த தண்ணீர் பற்றாக்குறை மிகவும் மோசமாகிவிட்டது. மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 3267 அணைகளில்10% க்கும் குறைவாக தான் தண்ணீர் உள்ளது. இதில் மராத்வாடா பகுதிகளில் உள்ள அணைகள் கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 20% க்கும் அதிகமாக தண்ணீரை சேமித்து வைத்திருந்தது.

தமிழகமும் வறண்டது

தமிழகமும் வறண்டது

இதே நிலைதான் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏறபட்டுள்ளது. போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த இந்த ஆண்டு சராசரியை விட 40% க்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது.

கேரளாவில் குறைந்த மழை

கேரளாவில் குறைந்த மழை

வழக்கமாக மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் 360 மிமீ மழையளவை பெறும் கேரள மாநிலமுடம இந்த வெறும் 163 மி.மீ மழையளவை மட்டுமே பெற்றுள்ளது. இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு ஆகும். இருப்பினும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
India receives very less pre monsoon rain fall in 65 years. It causes water deficiency in Many regions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X