டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது- 60 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் இருந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் இந்தியாதான் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

India records 67,151 new positives for Coronavirus

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 67,151 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,34,475 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் 1,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 59,449.

24 மணிநேரத்தில் புதிதாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.. அமெரிக்காவை முந்தியது!24 மணிநேரத்தில் புதிதாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.. அமெரிக்காவை முந்தியது!

இதுவரை மொத்தம் 24,67,759 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,07,267 பேர் மட்டுமே என்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம்

மகாராஷ்டிராவில் 1,66,239; ஆந்திராவில் 89,932; கர்நாடகாவில் 82,429; தமிழகத்தில் 52,128 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் (ஆக்டிவ் கேஸ்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Coronavirus tally crossed 32 lakh-mark on Wednesday after 67,151 fresh cases and 1,059 deaths were registered in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X