டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5915753 ஆக உயர்வு. கொரோனாவில் இருந்து 4852313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 93,461 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் வைரஸ் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதுவரை சரியான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இரண்டரை கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

India records higher COVID-19 recoveries as caseload crosses 59 lakh

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 93,461 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதிசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 21 ஆயிரத்து 176ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 16 ஆயிரத்து 450ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை 35,191பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் தற்போதைய நிலவரப்படி தொற்று பாதிப்புடன் 2 லட்சத்து 69 ஆயிரத்து 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு மளமளவென உயர்ந்து வருகிறது இன்று மட்டும் 8811 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 566023 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8503 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Coronavirus casesin India crossed 59 lakh on Saturday with 85,362 new cases, however, the number of recoveries was higher with 93,420 people recuperating in the last 24 hours, the Union health ministry said. The total number of recoveries stands at 48.49 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X