டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே தமிழ்நாட்டில் அதிக கொரோனா கேஸ்கள்.. மகாராஷ்டிராவிற்கு 2வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: திங்கட்கிழமையான நேற்று இரவு 9.30 மணி வரை இந்தியாவில் 58,463 கொரோனா கேஸ்களும், 2,698 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதன்மூலம், நாட்டில் இதுவரை மொத்தம் 2,95,68,540 கேஸ்களும், 3 லட்சத்து 77,027 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக 12,772 புதிய தொற்று நேற்று பதிவானது. நேற்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,728 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 269 ஆக உயர்ந்தது.

குட் நியூஸ்.. 13,000க்கு கீழ் சென்ற கொரோனா.. ஆனால் இந்த 2 மாவட்டங்களில் கட்டுக்குள் வராத வைரஸ்குட் நியூஸ்.. 13,000க்கு கீழ் சென்ற கொரோனா.. ஆனால் இந்த 2 மாவட்டங்களில் கட்டுக்குள் வராத வைரஸ்

மகாராஷ்டிரா இறப்பு விகிதம்

மகாராஷ்டிரா இறப்பு விகிதம்

மகாராஷ்டிரா (8,129), கேரளா (7,719) கேஸ்கள் பதிவு செய்தன. மகாராஷ்டிராவில் 1,592 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (254), கேரளா (161) ஆகியவை கொரோனா உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளன. முந்தைய அறிக்கைகளில் கொரோனா இறப்புகளை தவறவிட்ட மரணங்கள் சேர்க்கப்பட்டதால், மகாராஷ்டிராவில் நேற்று இறப்பு விகிதம் அதிகரித்து காட்டப்பட்டது.

 பரிசோதனைகள்

பரிசோதனைகள்

இந்த புள்ளிவிவரங்களில் நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், திரிபுரா மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் கேஸ்கள் மற்றும் இறப்புகள் சேர்க்கப்படவில்லை. நாட்டில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 14.92 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதற்கான முடிவுகள் திங்களன்று வெளியாகியுள்ளன. அந்த விவரம்தான் இது.

மோசமான நிலவரம்

மோசமான நிலவரம்

ஜூன் 13 அன்று உலகிலேயே 7 நாள் சராசரி இறப்பு விகிதத்தை இந்தியா பதிவு செய்தது. அதாவது சராசரி கொரோனா நோயாளி இறப்பு விகிதம், அந்த வாரத்தில், 3,588 என்ற அளவுக்கு இருந்தது. உலகின் மொத்த கொரோனா இறப்புகளில் கிட்டத்தட்ட 33% ஜூன் 13 அன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் சுமார் 14.99 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது முந்தைய 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 19.84 லட்சம் அளவு குறைவாகும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 1.08 லட்சம் அளவு அதிகம்.

அதிகரிக்கும் விழிப்புணர்வு

அதிகரிக்கும் விழிப்புணர்வு

நாட்டில் தினசரி தடுப்பூசிகளின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஜூன் 13 அன்று 30.03 லட்சமாக இருந்தது, இது ஒரு வாரத்திற்கு முன்பு (ஜூன் 6) பதிவு செய்யப்பட்ட 26.96 லட்சத்தை விட சுமார் 4 லட்சம் இது அதிகமாகும்.

English summary
As of 9.30 pm on Monday, there were 58,463 corona cases and 2,698 deaths in India. As a result, a total of 2,95,68,540 cases and 3 lakh 77,027 deaths have been reported in the country so far. Tamil Nadu recorded the highest number of 12,772 new infections in the country yesterday. Maharashtra (8,129) and Kerala (7,719) registered cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X