டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

44 ஆண்டுகளுக்குப் பின் மிக அதிகமான மழையில் மிதந்த ஆகஸ்ட் மாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 44 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய ஆகஸ்ட் மாதத்தில்தான் மிக அதிகமான மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் 251.3 மி.மீ மழை பதிவாகும். நடபாண்டிலோ 317.4 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையமானது கடந்த 50 ஆண்டுகால ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு விவரத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்படி வழக்கத்தைவிட 5 முறை 20% கூடுதலாக ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்திருக்கிறது.

India records wettest August after 1976s 28.4%

1970-ம் ஆண்டு 26%; 1973-ம் ஆண்டு 27.8%; 1975-ல் 21%; 1976-ல் 28.4% ; 1983-ல் 23.8% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. நடப்பாண்டில் 26.3% மழை கூடுதலாக கொட்டியிருக்கிறது.

மத்திய இந்திய பகுதிகளாக ஒடிஷா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இந்த ஆண்டு மழை அதிகம். ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் -22.3%-ல் இருந்து 61.5% ஆக மழை பதிவாகி உள்ளது.

44 வருடங்களில்.. இதுதான் பெஸ்ட்.. ஆகஸ்ட் மாதம் அசாத்திய ரெக்கார்ட் படைத்த மழை.. எவ்வளவு பெய்தது?44 வருடங்களில்.. இதுதான் பெஸ்ட்.. ஆகஸ்ட் மாதம் அசாத்திய ரெக்கார்ட் படைத்த மழை.. எவ்வளவு பெய்தது?

ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் வங்க கடலில் உருவான பல்வேறு குறைந்த காற்ற தாழ்வு நிலைகள் தென்மேற்கு பருவமழையை படுதீவிரமாக்கியது. ஜூலை மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதுவும் உருவாகவில்லை.

English summary
India has recorded its wettest August since 1976's 28.4%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X