டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 15,940 பேருக்கு புதியதாக கொரோனா; 20 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

India registers 15,940 coronavirus cases; 20 deaths

இந்தியாவில் நேற்று 17,336 புதிய கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 83,284 ஆக இருந்தது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 13.029 பேர் குணமடைந்திருந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,63,103 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 86.02 கோடி (86,02,58,139). வாராந்திரத் தொற்று 3.07 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.39 சதவீதமாக பதிவாகியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,940 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 12.425 பேர். குணமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,61,481.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91,779 ஆக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.21 சதவீதமாக உள்ளனர்.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 196.94 கோடிக்கும் அதிகமான (1,96,94,40,932) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,54,91,739 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.61 கோடிக்கும் அதிகமான (3,62,20,781) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 193.53 கோடிக்கும் மேற்பட்ட (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 12.14 கோடிக்கும் மேற்பட்ட (12,14,44,440) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

English summary
India has registered 15,940 coronavirus cases; 20 deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X