டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மட்டும் 7 பேர் பலி.. கொரோனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1046 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் இந்தியாவில் பலியாகி உள்ளனர் . ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய அரசின் கணக்குபடி 1046 பேருக்கு பாதித்துள்ளது.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    நாடு சமூகம் பரவுவதற்கான மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என்ற அச்சத்திற்கு மத்தியில் வென்டிலேட்டர்கள் கொள்முதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கு என சிறப்பு பங்களிப்பு நிதியை அறிவித்தார்.

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் பலியானதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்! இந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்!

    95 பேர் குணமாகியுள்ளனர்

    95 பேர் குணமாகியுள்ளனர்

    இன்று நிலவரப்படி வைரஸ் பாதிப்பு 1046 ஆக அதிகரித்தது. நேற்று 918 ஆக இருந்த நிலையில் தற்போது 978 ஆக உயர்ந்துள்ளது. அதில் 920 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் குணம் அடைந்துள்ளனர் . அதாவது 95 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    ஐசிஎம்ஆர் மறுப்பு

    ஐசிஎம்ஆர் மறுப்பு

    இதனால் சமுதாய பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால் இது தொடர்பான பரிந்துரைகளை நிராகரித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதைக் குறிக்க குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றும் சமூக பரிமாற்றத்திற்கு இதுவரை "உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

    வைரஸ் பரவும் அச்சம்

    வைரஸ் பரவும் அச்சம்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக கடந்த மார்ச் 24ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் இந்தியா 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு பெரிய குழுக்களாக வெளியேறுவது வைரஸ் பரவுவதற்கான அச்சங்களை அதிகப்படுத்தியுள்ளது.

    இந்தியா மறுப்பு

    இந்தியா மறுப்பு

    எனினும் "சமுதாய பரவலைக் குறிக்க கணிசமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை நாங்கள் காணும் வரை, சமூக பரவல் என்று இதை உறுதிப்படுத்த முடியாது" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவர் ராமன் ஆர் கங்ககேத்கர் கூறினார்.

    கேரளா 2வது இடம்

    கேரளா 2வது இடம்

    சுகாதாரத்துறை அமைச்சக கணக்குப்படி, மகாராஷ்டிரா (6), குஜராத் (3), கர்நாடகா (2), மத்தியப் பிரதேசம் (2) மற்றும் தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது. 69 வயது நபர் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்ததை அடுத்து, சனிக்கிழமை கேரளாவில் முதல் கொரோனா மரணம் உறுதியானது. கேரளாவில் 187 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆறு பேர் இதுவரை இறந்துள்ளனர்.

    7 பேர் பலி

    7 பேர் பலி

    இன்று மகாராஷ்டிராவில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் பலியானார். இதோடு மகாராஷ்டிராவில் 8வது நபர் பலியாகி உள்ளார்.நேற்று மரணமடைந்த 45 வயது நபருக்கு கொரோனா இருந்தது இன்று சோதனையின் மூலம் உறுதியானது குறிப்பிடதக்கது.

    English summary
    India Registers 179 New COVID-19 Cases, Highest in a Single Day. The health ministry said out of total 918 cases, 819 were active COVID-19 cases, while 79 people were either cured/discharged and one had migrated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X