டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் இருநாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்குதான், தனது நாடு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

India rejected all references made by the Turkish president on Kashmir

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் குறிப்பிட்டு பேசிய எர்டோகன், எங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக அசவுகரியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சமீபத்திய காலங்களில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்த துன்பங்கள் மிகவும் மோசமாகிவிட்டன. காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் துருக்கி நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து துணை நிற்கும் என தெரிவித்திருந்தார்.

துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த இந்த கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று கூறியதாவது: துருக்கியின் ஜம்மு காஷ்மீர் பற்றிய அனைத்து கருத்துக்களையும் நிராகரிக்கிறோம். இது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும்.

India rejected all references made by the Turkish president on Kashmir

இந்தியாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் அதன் பகுதிகளுக்கும் பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று துருக்கி அதிபருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் எர்டோகன், காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எழுப்பி உரையாற்றினார். ஐ.நாவில் அவர் கூறிய கருத்துக்களுக்கு இந்தியா இதேபோன்ற பதிலடியை அப்போதே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian spokesperson of the Ministry of External Affairs Raveesh Kumar on Saturday said India rejected all references made by the Turkish president on Kashmir adding that the region was an integral and inalienable part of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X