டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் லாக்டவுன்.. ஆபாச படம் பார்ப்போரின் எண்ணிக்கை 95 சதவீதமாக உயர்வு.. அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 வாரங்கள் அளிக்கப்பட்ட லாக்டவுனில் இந்தியாவில் ஆபாச வலைதளங்களை பார்ப்போர் எண்ணிக்கை 95 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களும் மூடப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதி உள்ளோர் பணிபுரிகிறார்கள். மற்றவர்கள் விடுமுறையில் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் ஆபாசவலைதளங்களை பார்ப்போரின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஓர் ஆபாச வலைதளம் எடுத்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

டிராபிக்

டிராபிக்

இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களில் ஆபாச பக்கங்களை பார்ப்போர் குறித்த டிராபிக் நிலவரங்களை அந்த தளம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பிரான்ஸில் மார்ச் 17-ஆம் தேதி முதல் லாக்டவுன் அறிவித்தவுடன் ஆபாச தளங்களை பார்ப்போர் எண்ணிக்கை உடனடியாக 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தாலி

இத்தாலி

அது போல் ஜெர்மனியில் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்த நிலையில் ஆபாச வலைதளங்களை பார்ப்போர் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா பாதித்த நாடு என்றால் அது இத்தாலி. இங்கு மார்ச் 9 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆபாசபடங்களை பார்ப்போர் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்தது.

கேளிக்கை விடுதி

கேளிக்கை விடுதி

ரஷ்யாவில் மார்ச் 30 முதல் லாக்டவுன் அறிவித்த நிலையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள மாஸ்கோ மேயர் உத்தரவிட்டிருந்தார். அது போல் மார்ச் 25ஆம் தேதி முதல் சினிமாக்கள், இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட்ட நிலையில் இங்கு ஆபாச படம் பார்ப்போரின் எண்ணிக்கை 56 சதவீதமாக உயர்ந்தது.

இந்தியா

இந்தியா

ஸ்பெயினில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் ஆபாச படம் பார்ப்போரின் எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டியது. அது போல் இந்தியாவில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு அதாவது 3 வாரத்திற்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 வாரத்தில் ஆபாச படம் பார்ப்போரின் எண்ணிக்கை 95 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏராளமான ஆபாச வலைதளங்களை ப்ளாக் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
India reports 95% rise in viewing pornography sites during lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X