டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்!

இந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்!- வீடியோ

    டெல்லி: இந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டது.

    இந்தியா உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணிக்கையிலான ராணுவ தளவாடங்களை வாங்கி கொண்டு இருக்கிறது.

    ரஷ்யாவுடன் தற்போது இந்தியா அதிக அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. ரஷ்யாவுடன் இந்தியா நிறைய ராணுவ ஒப்பந்தங்களை செய்யும் முடிவில் உள்ளது.

    அயோத்தி வழக்கு.. மத்தியஸ்தர் நியமிக்கப்படுவாரா? இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு! அயோத்தி வழக்கு.. மத்தியஸ்தர் நியமிக்கப்படுவாரா? இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    எப்படி

    எப்படி

    கடந்த வாரம் உத்தர பிரதேசம் மாநிலம் அமேதியில் பிரதமர் மோடி ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கி வைத்தார். இந்த தொழிற்சாலை ரஷ்யாவின் உதவியுடன் செயல்படும் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலை திறக்கப்பட்ட போதுதான் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எப்படிப்பட்ட ஒப்பந்தம்

    எப்படிப்பட்ட ஒப்பந்தம்

    இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கு அக்யூலா கிளாஸ் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா வழங்கும். இது 1986ல் வடிவமைக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல் ஆகும். இதை தற்போது புதிதாக அப்டேட் செய்து இருக்கிறார்கள். இதை சக்ரா 3 நீர்மூழ்கி கப்பல் என்று இந்தியாவில் அழைக்கிறார்கள்.

    எவ்வளவு ஒப்பந்தம்

    எவ்வளவு ஒப்பந்தம்

    இந்த கப்பல் அணுசக்தியால் இயங்க கூடியது. இந்த ஒப்பந்தம் 22 ஆயிரம் கோடி ரூபாயில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுடன் அதில் இருக்கும் ஆயுதங்களும் இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ல் இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் அளிக்கப்படும்.

    பலம்

    பலம்

    இந்திய கடற்படைக்கு இந்த கப்பல் புதிய பலம் சேர்க்கும் என்கிறார்கள். இந்தியாவிடம் இருந்த சக்ரா 1 கப்பல் சில வருடங்களுக்கு முன் விடைபெற்றது. தற்போது நாம் சக்ரா 2 கப்பலை பயன்படுத்தி வருகிறோம். இந்த ரஷ்யா கப்பலின் லீஸ் 2022ல் முடிய உள்ளது. அதன்பின் இதன் மீதான லீஸ் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India, Russia sigh deal of Rs.22,000 crore for Nuclear-Powered attack submarine yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X