டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜிக்கு "பாரத ரத்னா விருது".. ஆகஸ்ட் 8ம் தேதி வழங்கப்படுகிறது இந்தியாவின் உயரிய கௌரவம்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்பபட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்குகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பிராணப் முகர்ஜி. இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார்.

Indias 13th President Pranab Mukherjee to be awarded Bharat Ratna on August 8

இந்நிலையில் பிரணாப் முகர்ஜீ நாட்டிற்காக அர்பணிப்புடன் பணியாற்றியதற்காக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

அப்போது பிரணாப் முகர்ஜியுடன், சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வழங்கப்பட உள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை வழங்குகிறார்.

முன்னதாக பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த ஜனவரி மாதம் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரணாப்புக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது அளித்தது அப்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.

English summary
Former President Pranab Mukherjee will be awarded the Bharat Ratna on August 8
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X