டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்'.. முதல் மாதமே சூப்பர் லாபம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் முதல் தனியார் ரயிலான , 'தேஜஸ்' ரயில், முதல் மாதத்தில், 70 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நாட்டின் தலைநகர் டில்லி - உத்தர பிரதேச தலைநகர், லக்னோ இடையே, அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.

இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த தேஜஸ் ரயில் பெற்றது.

கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- போலீசாருடனான மோதலால் பரபரப்புகட்டண உயர்வை ரத்து செய்ய கோரி டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- போலீசாருடனான மோதலால் பரபரப்பு

6 நாட்கள் இயக்கம்

6 நாட்கள் இயக்கம்

இந்த தேஜஸ் ரயில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படுகிறது. செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் ரயில் சேவை நடைபெறுகிறது.

25லட்சம் இன்சூரன்ஸ்

25லட்சம் இன்சூரன்ஸ்

ரயிலை இயக்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. தரமான உணவு, ரூ .25 லட்சம் வரை இலவச காப்பீடு மற்றும் தாமதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு போன்ற வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 85 சதவீதம் புக்கிங்

85 சதவீதம் புக்கிங்

முற்றிலும் . குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தேஜஸ் ரயிலில், சாதாரண இருக்கை வசதிக்கு, 1,280 ரூபாயும், 'எக்ஸ்சிக்யுட்டிவ்' இருக்கை வசதிக்கு, 2,450 ரூபாயும், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.. அனைத்து நாட்களிலுமே 80 முதல் 85 சதவீதம் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியே காணப்படுகிறது.

ரூ .3.70 கோடி வருவாய்

ரூ .3.70 கோடி வருவாய்

அக்டோபர் 5 முதல் அக்டோபர் 28 வரை (21 நாட்கள், ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் ஓடுவதால்), ரயிலை இயக்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி செலவழித்த தொகை சுமார் 3 கோடி ரூபாய் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

70 லட்சம் லாபம்

70 லட்சம் லாபம்

இதன் மூலம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிநவீன ரயிலை இயக்க ஒரு நாளைக்கு சராசரியாக ரூ .14 லட்சம் செலவழித்துள்ள ரயில்வே துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி , பயணிகள் கட்டணத்தில் இருந்து தினமும் ரூ .17. 50 லட்சம் சம்பாதித்தது. இந்த , தேஜஸ் ரயில் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் 70 லட்சம் ரூபாய் ஐ.ஆர்.சி.டி.சிக்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் தனியார்கள் முக்கிய ரயில்களை இயக்க அதிக ஆர்வம் காட்டுவதற்கு இந்த தனியார் ரயில் முன்னோடியாக அமைந்துள்ளது.

English summary
indias 1st 'private' train profit: IRCTC's Tejas Express has made a profit of around Rs 70 lakh till October this year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X