டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது! மேலும் 584 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 45,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2-வது அலையாக பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1,92,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,70,712 ஆக உயர்ந்துள்ளது.

Indias Corona cases cross 90 Lakhs

2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் ஒருநாள் எண்ணிக்கை 44,807. இந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை மொத்தம் 84,28,410 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 584 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

இதனால் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,32,162 ஆகவும் உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,43,794 ஆக மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India's new coronavirus cases rose by 45,882 in the past 24 hours to touch 90,04,365.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X