டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல் முறையாக குறைய தொடங்கியிருக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 90,000க்கும் கீழ் இருந்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,12,40,113. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,28,35,459.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்!! இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்!!

இந்தியா 2-வது இடம்

இந்தியா 2-வது இடம்

உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலக நாடுகளின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,65,066. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் குறைகிறது

இந்தியாவில் குறைகிறது

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு என்பது 90,000-த்தை கடந்ததாக இருந்து வந்தது. செப்டம்பர் 7 முதல் 13 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,45,014 ஆக இருந்தது. செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரையிலான வாரத்தில் இது 6,40,019 ஆக குறைந்தது. கடந்த 4 மாதங்களில் கொரோனா பாதிப்பு முதல் முறையாக குறைந்துள்ளது.

இந்தியாவின் பாதிப்பு 90,000-க்கு கீழ்

இந்தியாவின் பாதிப்பு 90,000-க்கு கீழ்

ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா பாதிப்பு 90,000க்கும் கீழாக இருக்கிறது. ஞாயிறன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 87,382 ஆகவும் திங்கள்கிழமையன்று இது 86,961 ஆகவும் குறைந்திருந்தது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.87 லட்சமாகும்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 87,882. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 43,96,399. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 10,03,299 மட்டும்தான்.

English summary
For the first time in last few months of the Coronavirus tally have registered a fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X