டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 15 நாட்களில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா மரணங்கள்- மகா., டெல்லிதான் காரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை திடீரென மொத்தமாக அறிவித்த காரணத்தால் 15 நாட்களில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துவிட்டது.

நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது ஜூன் 3-ந் தேதியன்று மொத்தம் 5,815 ஆக இருந்தது. ஆனால் ஜூன் 17ல் இந்த எண்ணிக்கையானது 11,903 ஆக அதிகரித்தது. இதனால் உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா 8-வது இடம் என்ற நிலைக்கு போனது.

Indias Coronavirus deaths double in 15 days

அத்துடன் இந்தியாவில் கொரோனா இறப்பு என்பது 2.9%-ல் இருந்து 3.4% ஆகவும் அதிகரித்தது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமான கொரோனா மரணங்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தன.

ஜூன் 11-ந் தேதி முதல் 17 வரை மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் தமிழகம் ஆகிய மாநிலங்களின் நாள்தோறைய கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவாகவே இருந்தன. ஆனால் புதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 1409 என அறிவிக்கப்பட்டது. வழக்கமான மரண எண்ணிக்கையைவிட இது 8 மடங்கு அதிகம்.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பயங்கரமாக தாக்கி வரும் கொரோனா- 24 மணிநேரத்தில் 3,752 பேருக்கு பாதிப்புமகாராஷ்டிராவில் தொடர்ந்து பயங்கரமாக தாக்கி வரும் கொரோனா- 24 மணிநேரத்தில் 3,752 பேருக்கு பாதிப்பு

Recommended Video

    Corona பாதிப்பை குணப்படுத்தும் Dexamethasone - Oxford scientists கண்டுபிடிப்பு

    பதிவாகதா மரணங்களை மொத்தமாக கணக்கிட்டு மகாராஷ்டிரா அரசு அறிவித்ததுதான் இதற்கு காரணமாகும். குறிப்பாக மும்பையில்தான் 1,000 மரணங்கள் இப்படி பதிவாகாமல் இருந்திருக்கின்றன. டெல்லியும் கூட ஜூன் 17- ந் தேதியன்று 439 கொரோனா மரணங்கள் அறிவித்தது. இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்களில் இது 22%. டெல்லி அரசும் பதிவு செய்யப்படாத கொரோனா மரணங்களை மொத்தமாக கணக்கிட்டு அறிவித்ததுதான் காரணமாகும்.

    இந்தியாவில் கொரோனா மரணங்களில் மகாராஷ்டிரா, டெல்லியின் பங்கு 62% ஆக உள்ளது. தமிழகத்தின் பங்கு 4.4%. ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத்தின் பங்களிப்பு 13% என கணக்கிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India's death toll due to coronavirus jumped from 5,815 on June 3 to 11,903 on June 17.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X