டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா- உலக அளவில் தொடரும் 3-வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அளவில் இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,70,43,179. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,82,986. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,91,46,401.

உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகம். இங்கு மொத்தம் 64,29,805. இதற்கு அடுத்ததாக பிரேசிலில் 41,23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 89237 பேருக்கு கொரோனா.. சீனாவின் 10 மாத கேஸ்களை ஒரே நாளில் எடுத்த இந்தியா.. ஷாக்! 24 மணி நேரத்தில் 89237 பேருக்கு கொரோனா.. சீனாவின் 10 மாத கேஸ்களை ஒரே நாளில் எடுத்த இந்தியா.. ஷாக்!

இந்தியா 3-வது இடம்

இந்தியா 3-வது இடம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 40,748 பேருக்கும் பிரேசிலில் 31,199 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,10,839.

அமெரிக்காவை நெருங்கும் இந்தியா?

அமெரிக்காவை நெருங்கும் இந்தியா?

நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்கிற நிலைமை நீடித்தால் பிரேசிலை முந்தி அமெரிக்காவை இந்தியா நெருங்கும் நிலை உருவாகும். சீனாவில் 10 மாதங்களில் பதிவான கொரோனா எண்ணிக்கையை இந்தியா ஒரேநாளில் காட்டி வருகிறது.

உலகத்தில் மிக அதிகவேகமான பரவல்

உலகத்தில் மிக அதிகவேகமான பரவல்

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் மட்டுமே 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே மிக குறைவான நாட்களில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.

மரணங்கள் எண்ணிக்கை

மரணங்கள் எண்ணிக்கை

நம் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161. இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,77, 673. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிகை 8,61, 866 பேர். இந்தியாவில் ஒரேநாளில் 1044 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 70,679.

மாநிலங்களில் நிலவரம்

மாநிலங்களில் நிலவரம்

இந்தியாவில் மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 20,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலங்களில் ஆந்திரா 10,825; கர்நாடகா 9,746; உபி. 6590; தமிழகம் 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

English summary
India reporterd 90,600 new coronavirus infections marking the biggest single day spike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X