டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடரும் சோகம்... 71 லட்சத்தை தாண்டியது இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,08,798 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,76,43,775. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,79,558. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,82,28,157.

கேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்புகேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்பு

71 லட்சத்தை தாண்டிய இந்தியா

71 லட்சத்தை தாண்டிய இந்தியா

உலகில் அமெரிக்காவில்தான் மிக அதிகமாக 79,73,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் திங்கள்கிழமை நிலவரப்படி 71,02,194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகும்.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

முதலிடத்தில் மகாராஷ்டிரா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61,29,611 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,08,798 ஆகவும் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். மகாராஷ்டிராவில் 15,17,434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்;

தமிழக நிலவரம்

தமிழக நிலவரம்

2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் 7,55,727 பேரும் 3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 7,10,309 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். தமிழகத்தில் 6,51,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் ஆந்திரா 2-வது இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Coronavirus tally crossed 71-lakh mark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X