டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு.. 10 நாளில் இரண்டு மடங்கு ஸ்பைக்.. 2லட்சத்தை எட்டியது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெறும் 10 நாளில் இரண்டு மடங்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2லட்சத்து 739 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 1038 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி சில விவரங்களை இப்போது பார்ப்போம். நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,99,620 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 8மணிக்கு 2 லட்சம் என்ற உச்சத்தையும் தாண்டி உள்ளது இந்தியா.

இந்தியா மோசம்

இந்தியா மோசம்

மாநில அரசுகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி. ஒரு நாள் பாதிபபு நிலவரம் 1 லட்சத்தைத் தாண்டிய இந்தியா, வெறும் 10 நாட்களுக்குப் பிறகு 2லட்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்த உலகின் ஒரே நாடான அமெரிக்கா, 1 லட்சத்தை தாண்டிய பின்னர் இந்த மோசமான கடுமையான மைல்கல்லை எட்ட 21 நாட்கள் எடுத்தது. மாநில அரசுகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி. ஒரு நாள் பாதிபபு நிலவரம் 1 லட்சத்தைத் தாண்டிய இந்தியா, வெறும் 10 நாட்களுக்குப் பிறகு 2லட்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்த உலகின் ஒரே நாடான அமெரிக்கா, 1 லட்சத்தை தாண்டிய பின்னர் இந்த மோசமான கடுமையான மைல்கல்லை எட்ட 21 நாட்கள் எடுத்தது.

அக்டோபர் 30ம் தேதி

அக்டோபர் 30ம் தேதி

கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தைத் எட்டியது மற்றும் நவம்பர் 20 ஆம் தேதி 2 லட்சத்தைத் தாண்டியது. ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாளில் 3,09,035 கொரோனா கேஸ்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளதாக உலக அளவீடுகளின் இன்ஃபோ வலைத்தளம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச மரணம்

அதிகபட்ச மரணம்

கடந்த 11 நாட்களில் 10 நாட்களில் தினசரி கேஸ்கள் புதிய உயர்வை எட்டியுள்ளது. புதன்கிழமை ஒரு நாளில் 1,038 இறப்புகள் பதிவாகியுள்ளது, கடந்த அக்டோபர் 2 ம் தேதிக்கு பிறகு மிக அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும். கொரோனா தொற்று பல மாநிலங்களில், குறிப்பாக இந்தியாவின் மையப்பகுதியில் ஆபத்தான வகையில் பரவி உள்ளது.

மாகாராஷ்டிரா உ.பி

மாகாராஷ்டிரா உ.பி

நாட்டின் மையப்பகுதியில் உள்ள ஒன்பது மாநிலங்கள் தான் புதன்கிழமை அன்று தினசரி எண்ணிக்கையில் மிக உயர்ந்த உயர்வைப் பதிவு செய்துள்ளன. உத்தரபிரதேசம் 20,510 புதிய கேஸ்களை பதிவு செய்துள்ளது, மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஒரு நாளில் 20,000 க்கும் மேற்பட்ட தொற்றுநோய்களைப் பதிவுசெய்த இரண்டாவது மாநிலமாக இது திகழ்கிறது. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் முதல் முறையாக 10,000 தினசரி கேஸ்கள் பதிவாகி இருந்தது

டெல்லி

டெல்லி

டெல்லியில் தொற்றுநோய் கிட்டத்தட்ட தீவிரமாக உயர்ந்துள்ளது, புதன்கிழமை மட்டும் 17,282 கேஸ்களை பதிவுசெய்துள்ளது, மூன்று நாட்களுக்கு முன்பு 10,000 ஆயிரத்தை எட்டிய கொரோனா இப்போது 17 ஆயிரம் என்ற உச்சம் தொட்டுள்ளது கர்நாடகா (11,265), மத்தியப் பிரதேசம் (9,720), தமிழ்நாடு (7819) குஜராத் (7,410), ராஜஸ்தான் (6,200), ஹரியானா (5,398), வங்காளம் (5,892) மற்றும் பீகார் (4,786) ஆகியவை தினசரி கேஸ்களில் புதிய உயரத்தை கண்டன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

ஏப்ரல் 6 ம் தேதி தேர்தலில் வாக்களித்த கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் 13.45% ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 8,778 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன, இது அக்டோபர் 28 க்குப் பிறகு மிக அதிகமாகும். மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா 58,952 புதிய கேஸ்களை நேற்று பதிவு செய்துள்ளது, செவ்வாய்க்கிழமை 60,212 என்ற எண்ணிக்கையில் இருந்து சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 278 இறப்புகள் பதிவாகியுள்ளது.. சத்தீஸ்கரில் 120 பேர் உயிரிழந்துள்ளனர், டெல்லியில் கொரோனவால் இறப்புக்கள் ஒரே நாளில் 104 ஆக அதிகரித்துள்ளன - குஜராத் (73), உ.பி. (68), பஞ்சாப் (63) மற்றும் மத்திய பிரதேசத்தில். (51) என உயிரிழப்புகள் ஒரு நாளில் பதிவாகி உள்ளது.

English summary
India reported 2 lakh fresh Covid-19 cases on thursday, with the daily case count almost doubling in 10 days amid an unprecedented surge in the pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X