டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    நான்கரை ஆண்டுகளில் மோடி அரசு வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா ?

    டெல்லி: மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசின் கடன், 50 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வாங்கிய கடன் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    மோடி ஆட்சியில்பல்வேறு கடன்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்த கடன்களை ஒப்பிடும்போது தற்போதுள்ள கடன்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.

     India’s debt increased by 50% in modi’s five year governance

    8-வது அரசாங்க கடன்களின் நிலை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்த கடன் விவரங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. அதில் கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்க கடன்கள் 49 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த செப்டம்பர் வரை மட்டும் 82,03,253 கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக வாங்கியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 54,90,763 கோடியாக இருந்த இக்கடன் தற்போது 49 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மிக முக்கியமாக இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பொது கடன் 48 லட்சம் கோடியில் இருந்து 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 51.7 சதிவீதம் உயர்வாகும். அதனால் உள் கடன் 54 சதவீதம் உயர்ந்து 68 லட்சம் கோடி ஆகியுள்ளது.

    சந்தைக் கடன்கள் என்ற அடிப்படையில் பார்த்தோமானால் கிட்டத்தட்ட அதே அளவுக்கு கடன் உயர்ந்துள்ளது. 47.5 சதவீதம் உயர்ந்துள்ள சந்தை கடனானது 52 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிப்பகுதியான 2014ம் ஆண்டில் தங்க ஒப்பந்தங்கள் மூலம் கடனே இல்லாத நிலை இருந்தது. ஆனால் அது தற்போது அதிகரித்து, 9,089 கோடியாக உயர்ந்துள்ளது.

    English summary
    The Modi Government increased the liabilities of the government by 49% in the last 5 years. As per the 8th edition of the status paper of the government debt, the debt stands at 82 lakh crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X