டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு!

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடன் மொத்தமாக 51% அதிகரித்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    51% அதிகரித்த இந்தியாவின் கடன், பெரும் பொருளாதார சரிவு!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடன் மொத்தமாக 51% அதிகரித்து உள்ளது. பொருளாதார வல்லுநர்களை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது.

    இதற்கு இடையில் தற்போது இந்தியா உலக நாடுகளிடமும், உலக வங்கியிடமும் வாங்கி இருக்கும் மொத்த கடன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அளிக்கின்றது.

    பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

    எவ்வளவு உயர்வு

    எவ்வளவு உயர்வு

    அதன்படி இந்தியாவின் கடன் கடந்த 2018 செப்டம்பர் கணக்குப்படி ரூ. 82,03,253 கோடியாக உள்ளது. 2014ல் காங்கிரஸ் ஆட்சி முடிந்த போது இந்தியாவின் கடன் ரூ. 54,90,763 கோடியாக இருந்தது. இது மட்டுமில்லாமல் வேறு இடங்களிலும் இந்திய அரசு சார்பாக வாங்கப்பட்டு இருக்கிறது. 51% கடன் மொத்தமாக கடந்த 4.5 வருடங்களில் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது.

    எப்படி எல்லாம்

    எப்படி எல்லாம்

    உலக வங்கி, உலக நாடுகளில் உள்ள வேறு சில வங்கிகள் ஆகியவைகளில் இந்திய அரசு இவ்வளவு லோன்களை எடுத்து இருக்கிறது. அதேபோல் தங்க இருப்பு மூலமும் அதிக அளவில் இந்தியா கடன்களை வாங்கி உள்ளது. உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது கூட இந்திய அரசு இவ்வளவு கடன்களை வாங்கவில்லை, ஆனால் இப்போது அதிக கடன்களை வாங்கி உள்ளது.

    நீக்கம்

    நீக்கம்

    அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு பின்தான் இந்தியா அதிக அளவில் கடன்களை வாங்க தொடங்கி உள்ளது. மத்திய அரசின் கஜானா இந்த நடவடிக்கைக்கு பின் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இதன் பாதிப்பு தொடரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வேலைவாய்ப்பில் அதிக மந்தநிலை நிலவி வருகிறது. இந்த கடன் காரணமாக புதிய திட்டங்களை இந்தியாவில் தொடங்குவதில் பெரிய சிக்கல் ஏற்படும். இந்தியாவின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    India's debt increases up to 50% suddenly, in the PM Modi rule says a report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X